Couple Friendly ( தெலுங்கு):
அஸ்வின் சந்திரசேகர் கதை ,திரைக்கதை எழுதி இயக்க சந்தோஷ் சோபன், மானசா வாரணாசி , யோகி பாபு , லிவிங்க்ஸ்டன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘Couple Friendly’. இண்ட்டீரியர் டெக்ரேசன் டிசைனர் ஆக சென்னையில் வாழும் நாயகன் நாயகியை சந்தித்ததும் அவர் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள் தான் கதை.
Funky (தெலுங்கு):
கயாடு லோஹர் நாயகியாக நடிக்கும் இந்தப்படத்தை கே.வி அனுதீப் இயக்கி இருக்கிறார். தெலுங்கு படமான ‘Funky’ தமிழ் டப்பிங்கிலும் வெளியாகிறது.
ஓ ரோமியோ (இந்தி):
விஷால் பரத்வாஜ் இயக்கத்தில், ஷாஹித் கபூர் நடிப்பில் வெளியாகியிருக்கும் ஆக்ஷன் திரில்லர் படம் ‘ஓ ரோமியோ’ (O’ Romeo). திரிப்தி திம்ரி, தமன்னா, திஷா பதானி உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர். இந்தப் படம் இந்த வாரம் திரையரங்கில் வெளியாகி இருக்கிறது.
சீதா பயணம்:
ஆக்ஷ்ன் கிங் அர்ஜூன் தயாரித்து இயக்கி இருக்கும் படம் இது. அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யா அர்ஜூன் நாயகி ஆக நடிக்க அர்ஜூனும், நடிகர் துருவா சர்ஜாவும் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார்கள். இந்தப் படம் இந்த வாரம் திரையரங்கில் வெளியாகி இருக்கிறது.
வூதரிங் ஹைட்ஸ் (ஹாலிவுட்):
எமரால்ட் பென்னெல் இயக்கத்தில் மார்கோட் ராபி மற்றும் ஜேக்கப் எலோர்டி நடிப்பில் உருவாகியுள்ள ‘வூதரிங் ஹைட்ஸ்’ படம் இந்த வாரம் (பிப்.13) வெளியாகி இருக்கிறது.
ஓடிடி ரிலீஸ்கள்:
1. அநாகாநாகா ஒரு ராஜு – Netflix – February 11, 2026
2. மனா ஷங்கர வரபிரசாத் காரு – ZEE5 – February 11, 2026
3. தலைவர் தம்பி தலைமையில் – Netflix – February 12, 2026
4. பேபி கேர்ள் – Sony LIV – February 12, 2026
5. கோஹ்ரா சீசன் 2 – Netflix – February 11, 2026
6. தி கான்ஜுரிங்: லாஸ்ட் ரைட்ஸ் – JioHotstar – February 13, 2026
7. கிராஸ் சீசன் 2 – Netflix – February 11, 2026