வாட்ஸ்அப், டெலிகிராம், சிக்னல், அரட்டை, ஸ்நாப்சாட், ஷேர்சாட் உள்ளிட்ட ஆப்கள் பயன்பாட்டிற்கு புதிய கெடுபிடிகளை விதித்துள்ளது மத்திய அரசு.
> இந்த ஆப்களை எந்த மொபைல் போன் நம்பரில் இயக்குகிறோமோ, அதன் சிம் கார்டு, நாம் பயன்படுத்தும் மொபைல் போனில் கட்டாயம் இருக்க வேண்டும்… அதுவும் ஆக்டிவாக இருக்கவேண்டும். இல்லையென்றால், இந்த ஆப்களை பயன்படுத்த முடியாமல் போகலாம்.
> ஒருவேளை, இந்த ஆப்களை கணினியில் பயன்படுத்தினால், இனி ஒவ்வொரு ஆறு மணிநேரத்திற்கும் தானாகவே “லாக் அவுட்’ ஆகும். அதன் பின், நம் கியூ.ஆர் கோடை ஸ்கேன் செய்து ‘லாக் இன்’ செய்துகொள்ள வேண்டும்.

சமூக வலைதள நிறுவனங்கள் என்ன செய்ய வேண்டும்?
மத்திய அரசின் இந்தச் சட்டத்தின் படி, சமூக வலைதள நிறுவனங்கள் தங்களது ஆப் வைத்திருக்கும் பயனாளர்கள், ஆப்பில் பதிவு செய்திருக்கும் மொபைல் எண்ணை வைத்திருக்கிறார்களா… அது ஆக்டிவாக உள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும்.
இதற்கான நடவடிக்கைகளை அடுத்த 90 நாள்களுக்குள் எடுக்க வேண்டும்.
இது குறித்த அறிக்கையை சமூக வலைதள நிறுவனங்கள் அடுத்த 120 நாள்களுக்குள் மத்திய தொலைத்தொடர்புத் துறைக்கு சமர்ப்பிக்க வேண்டும்.