அதிமுக மூன்றாக உடைந்துவிட்டது. அதை ஒன்றிணைக்கப் பாடுபட்டேன். ஆனால், அதை செயல்படுத்த முடியவில்லை. எல்லோரையும் ஒன்றிணைக்கலாம் என்றுதான் ‘தேவர் ஜெயந்தி’யின்போது பிரிந்தவர்களைச் சந்தித்துப் பேசினேன். ஆனால், அதற்காக என்னை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்துகூட நீக்கிவிட்டார்கள். இத்தனை ஆண்டுகாலம் கட்சியில் உழைத்த எனக்குக் கிடைத்தப் பரிசு இதுதான்.

அதன்பிறகு இன்றைக்கு தெளிவான முடிவை மேற்கொண்டுதான் நேற்று (நவ.26) சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருக்கிறேன்.
ஏன் இங்கு இணைந்தேன் என்று கேள்வி எல்லோருக்கும் எழும்.
இன்று திமுக – அதிமுக இரண்டும் வேறல்ல என்றாகிவிட்டது. இரண்டும் ஒன்றாக பயணித்து நாட்டில் நாடகம் நடத்தி வருகிறார்கள். புதிய மாற்றம் வேண்டும்.
இளவல் விஜய் அவர்கள் தவெக எனும் மாபெரும் இயக்கத்தை உருவாக்கி மக்கள் மனதில் இடம்பெற்றிருக்கிறார்.
‘ஒரு புதிய மாற்றம் வேண்டும். இரு கட்சிகள் மட்டும்தான் ஆளவேண்டுமா?’ என்ற எண்ணம் மக்கள் மனதில் ஆழமாக வந்துவிட்டது. மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள், தூய்மையான அரசியல் வேண்டும் என்று நினைக்கிறார்கள். அந்த அடிப்படையில்தான் தவெக கட்சியை, விஜய்யை மக்கள் வரவேற்கிறார்கள்.
2026 சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தவெக கட்சி மிகப்பெரிய வெற்றியைப் பெற்று ஆட்சியை அமைக்கும் என்பதை உறுதியாக சொல்லிக் கொள்கிறேன்” என்று பேசியிருக்கிறார்.
செங்கோட்டையனுக்கு தவெகவில் வழங்கவிருக்கும் பொறுப்புகள் குறித்து இன்று மாலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது