WI vs ZIM : வெஸ்ட் இண்டீஸின் மெகா வெற்றி, ஜிம்பாப்வேக்கு மட்டும் அல்ல, இந்தியாவுக்கும் சிக்கல்தான்!

Spread the love

நேற்று நடைபெற்ற சூப்பர் 8 போட்டி, இது ஜிம்பாப்வே அணிக்கு மட்டுமல்ல, இந்திய அணிக்கும் தலைவலியை உருவாக்கிய ஒரு போட்டி எனலாம்.

சூப்பர் 8 சுற்றில் நேற்று நடைபெற்ற வெஸ்ட் இண்டிஸ் – ஜிம்பாப்வே அணிகள் இடையிலான ஆட்டம், வெஸ்ட் இண்டீஸ் அணியின் அபார வெற்றியால், இந்தியாவுக்கு ஒரு மறைமுக சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நேற்று மும்பை வாங்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, தொடக்கத்திலிருந்தே ‘டாப் கியர்’ போட்டு அதிரடி காட்டியது.

WI vs ZIM
WI vs ZIM

ஷிம்ரான் ஹெட்மயர் – ரோவ்மேன் பவெல் ஜோடி, ஜிம்பாப்வே பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து, ரன்களை வேகமாக உயர்த்தியது. அதன் விளைவாக, 20 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 254/6 ரன்கள் குவித்தது.

இது ICC Men’s T20 World Cup வரலாற்றிலேயே இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் ஆகும். (2007-ம் ஆண்டு கென்யாவுக்கு எதிராக இலங்கை அடித்த 260 ரன்கள் முதலிடத்தில் உள்ளது.)

சரண்டரான ஜிம்பாப்வே:

255 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி, விண்டீஸ் பந்துவீச்சாளர்களின் வேகமும் துல்லியமும் முன்னால் நிலைகுலைந்து போனது.

சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்த அந்த அணி, இறுதியில் 106 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியைத் தழுவியது.

இந்த வெற்றியின் மூலம், வெஸ்ட் இண்டீஸ் அணி தனது நெட் ரன் ரேட் -ஐ மிக உயரத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது.

WI vs ZIM
WI vs ZIM

இந்தியாவின் நிலை:

தற்போதைய சூழலில், இந்திய அணியின் நிலைமை சற்று பரிதாபத்துகுரியதாவே தான் உள்ளது. ஏற்கெனவே தென்னாப்பிரிக்காவிடம் ஏற்பட்ட தோல்வியின் காரணமாக, இந்தியாவின் Net Run Rate (NRR) -3.800 என்ற பாதாளத்தில் உள்ளது.

இந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணி இவ்வளவு பெரிய ரன் வித்தியாசத்துடன் வெற்றி பெற்று, தனது ரன் ரேட்டை(+5.350) பெரிதும் உயர்த்தியிருப்பது, இந்தியாவின் செமி-பைனல் கனவுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.

இனி இந்தியாவுக்கு என்ன வழி?

இந்தியா அடுத்த போட்டியில் ஜிம்பாப்வேயை வென்றால் மட்டும் போதாது.

மிகப் பெரிய ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.

ரன் ரேட்டை மின்னல் வேகத்தில் உயர்த்தினால் மட்டுமே, மார்ச் 1-ம் தேதி நடைபெற உள்ள வெஸ்ட் இண்டீஸுடனான கடைசி ஆட்டத்தில் இந்தியாவுக்கு இன்னும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கும்.

அது நடக்காவிட்டால், இந்தியாவின் செமி-பைனல் கனவு உண்மையிலேயே கவலைக்கிடமானதாக மாறும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *