Will Rahul make way for his sister? Priyanka Gandhi becoming Prime Minister is inevitable, says her husband Vadra.-சகோதரிக்கு வழிவிடுவாரா ராகுல்: பிரியங்கா காந்தி பிரதமராவது தவிர்க்க முடியாதது என்கிறார் வதேரா

Spread the love

இது குறித்து கருத்து தெரிவித்த பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா, ”அரசியலில் அவருக்கு(பிரியங்கா) ஒரு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது. இந்த நாட்டில் தேவையான மாற்றங்களைக் கொண்டு வருவதிலும் அவருக்கு ஒரு சிறந்த எதிர்கால பங்கு இருப்பதாக நான் நினைக்கிறேன். இது காலப்போக்கில் நடக்கும், இது தவிர்க்க முடியாதது என்று நான் நினைக்கிறேன். பிரியங்காவை பலரும் பிரதமராக பார்க்க விரும்புகின்றனர். பிரியங்காவை மக்கள் பாராட்டுகின்றனர். பிரியங்கா தனது பாட்டி இந்திரா காந்தி, தந்தை ராஜீவ் காந்தியிடமிருந்து அதிகம் கற்று இருப்பார் என்று நினைக்கிறேன்.

மக்கள் அவரைப் பாராட்டுகிறார்கள். அவரிடம் அந்தத் தகுதி இருப்பதை மக்கள் பார்க்கிறார்கள். அவர் பேசும்போது, ​​மனதிலிருந்து பேசுகிறார். உண்மையில் கவனிக்கப்பட வேண்டிய விஷயங்களைப் பற்றி அவர் பேசுகிறார், மேலும் அவற்றைப்பற்றி விவாதிக்கிறார்,” என்று வதேரா கூறினார்.

பிரியங்கா காந்தி

பிரியங்கா காந்தி

ராகுல் காந்தியின் தலைமையில் காங்கிரஸ் கட்சி தேர்தலில் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது. இதையடுத்து கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கட்சியில் மாற்றத்தை விரும்புவதாக பெயர் சொல்ல விரும்பாத தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

இது குறித்து அத்தலைவர் மேலும் கூறுகையில்,” பிரியங்கா காந்தியை எளிதில் அணுக முடிகிறது. ஆனால் ராகுல் காந்தியை கட்சியினரால் எளிதில் அணுக முடியவில்லை. அவரை சுற்றி இருப்பவர்கள் சொல்வதைத்தான் ராகுல் காந்தி கேட்டு செயல்படுகிறார். ஆனால் பிரியங்கா காந்தி அனைவர் கருத்தையும் கேட்கிறார். அதோடு பிரியங்காவை பார்ப்பது மறைந்த இந்திரா காந்தியை நேரில் பார்ப்பது போன்று இருக்கிறது”என்று தெரிவித்தார்.

காங்கிரஸ் தலைவர்களின் இக்கருத்தால் ராகுல் காந்தி மீது காங்கிரஸ் நம்பிக்கை இழந்துவிட்டதாக பா.ஜ.க குற்றம் சாட்டி இருக்கிறது. பா.ஜ.க-வில் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறகு வேறு ஒருவர் தலைவராக வரும்போது அவரை எதிர்கொள்ளக்கூடிய வலுவான தலைமை காங்கிரஸ் கட்சிக்கு தேவை என்று காங்கிரஸ் தலைவர்கள் கருதுகின்றனர். எனவே பிரியங்கா காந்தியை காங்கிரஸ் கட்சியில் முன்னிலைப்படுத்துவதற்கு இதுவே சரியான நேரம் என்று கட்சியில் தலைவர்கள் பலரும் நினைக்கின்றனர்.!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *