‘லவ்வர்’ மற்றும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ ஆகிய படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய மதன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வித் லவ்’ (With Love). ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் இயக்குநரும் நடிகருமான அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாக அறிமுகமாகும் இந்தப் படத்தில் அனஸ்வரா ராஜன் கதாநாயகியாக நடித்துள்ளனர்.
ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்தின் Zion Productions மற்றும் மகேஷ் ராஜின் MRP Entertainment ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கின்றன. பிப்ரவரி 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இந்தப் படத்தின் சிறப்பு திரையிடல் சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் ரஜினிகாந்த், நடிகை ஸ்ருதிஹாசன், இசையமைப்பாளர் அனிருத், இயக்குநர்கள் நெல்சன், கே.எஸ். ரவிக்குமார், சசிகுமார், சிம்ரன், சமுத்திரக்கனி, ஏ.ஆர். ரஹ்மானின் மகன் அமீன், விக்ரம் பிரபு எனப் பெரும் திரைப்பட்டாளமே கலந்துகொண்டது. திரைப்படத்தைப் பார்த்தப்பிறகு திரைப்பிரபலங்கள் சொன்னவை…
இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்:
“படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. யூத்புல்லாகவும், அதே சமயம் நகைச்சுவையான விதத்திலும் படம் எடுக்கப்பட்டுள்ளது. திரையரங்கை விட்டு வெளியே வரும்போது ஒரு முழுமையான உணர்வு கிடைக்கிறது.