With Love: "`இதுதான் சக்ஸஸா'ன்னு கேட்டேன், அதுக்கு அப்பா என்ன பார்த்து..!"- சௌந்தர்யா ரஜினிகாந்த்

Spread the love

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘வித் லவ்’.

இயக்குநர் மதன் இயக்கியிருக்கும் ‘வித் லவ்’ படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ பட தயாரிப்பாளர்களில் ஒருவரான மகேஷ் ராஜ் என்பவரும் இணைந்து தயாரித்திருக்கின்றனர்.

கடந்த பிப்.6 ஆம் தேதி வெளியான இந்தத் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

With Love Movie
With Love Movie

ரஜினிகாந்த்தும் ‘வித் லவ்’ படக்குழுவை நேரில் அழைத்துப் பாராட்டி இருந்தார். இந்நிலையில் இந்தப் படத்தின் வெற்றி விழா இன்று நடைபெற்றிருக்கிறது.

அதில் பேசியிருக்கும் சௌந்தர்யா ரஜினிகாந்த், “ரொம்ப சந்தோஷமா இருக்கு. ப்ரிமியர் ஷோ முடிச்சிட்டு அப்பா- அம்மாவைப் பார்க்க போயஸ் வீட்டுக்கு நான் போனேன்.

உள்ள போனதும் ரெண்டு பேரும் எனக்கு ஒரு ஹக் கொடுத்தாங்க. என்னைப் பார்த்து சிரிச்சாங்க. அப்பாவைப் பார்த்து `இதுதான் சக்ஸஸா’ன்னு கேட்டேன். அப்பா சிரிச்சாங்க.

அந்தச் சிரிப்பை நான் வாழ்க்கையில மறக்க மாட்டேன். கிட்டத்தட்ட 16-18 வருஷமா வேலை பார்த்திட்டு இருக்கேன்.

 ரஜினிகாந்த் - சௌந்தர்யா ரஜினிகாந்த்
ரஜினிகாந்த் – சௌந்தர்யா ரஜினிகாந்த்

இந்தக் குடும்பத்துனால தான் (வித் லவ் டீம்) சக்ஸஸ்-னா என்னென்னு தெரிஞ்சது. இதுதான் என் முதல் சக்ஸஸ் மீட். இதை தந்த ‘வித் லவ்’ டீம்முக்கு என்னோட நெஞ்சார்ந்த நன்றிகள்” என நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *