ஆன்லைன் மோசடியால் ரூ.59 லட்சத்தை இழந்த பெண் டாக்டர்

Dinamani2fimport2f20222f42f92foriginal2fmouse.jpg
Spread the love

உத்தரப் பிரதேசத்தின் நொய்டாவைச் சேர்ந்த பெண் மருத்துவர் பூஜா கோயல்ட் என்பவர், செக்டர் 77 பகுதியில் வசித்து வந்துள்ளார். இவரை கடந்த ஜூலை 13ஆம் தேதியில் செல்போன் அழைப்பில் தொடர்புகொண்ட ஒருவர், தன்னை இந்தியத் தொலைபேசி ஒழுங்குமுறை ஆணையத்தின் அதிகாரி என்று அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார்.

பின்னர், பூஜாவின் செல்போன் தொலைபேசி ஒழுங்குமுறை ஆணையத்தால் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அதில் ஆபாச விடியோக்கள் இருப்பதாகவும் கூறியுள்ளார். ஆனால், பூஜா அதனை மறுத்துக் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து விடியோ அழைப்பில் தொடர்புகொண்ட அவர், ஆபாச விடியோக்கள் வைத்திருப்பதால், பூஜாவுக்கு கடுமையான விளைவுகளை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்று கூறி மிரட்டியுள்ளார். மேலும், ஒரு குறிப்பிட்ட தொகையை அளித்தால் மட்டுமே தப்பிக்க முடியும் என்றும் கூறியுள்ளார்.

இதனால் பயமுற்ற பூஜா இரண்டு நாள்களுக்குப் பிறகு, அவர் கூறியபடியே ஒரு வங்கிக்கணக்கிற்கு ரூ.59,54,000 பணப்பரிமாற்றமும் செய்துள்ளார்.

இதனையடுத்து, தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த பூஜா கோயல், சைபர் காவல்நிலையத்தில் மோசடி குறித்து கடந்த ஜூலை 22ஆம் தேதியில் புகார் அளித்துள்ளார்.

வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், பணப்பரிமாற்றம் செய்யப்பட்ட வங்கிக்கணக்கின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறினார்.

அதுமட்டுமின்றி, சந்தேகமளிக்கும் விதமாக செல்போன் அழைப்புகள் வந்தாலோ, பணம் கேட்டு மிரட்டினாலோ உடனடியாக காவல்துறையினரிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *