பாதிக்கப்பட்டவர்களுக்கு நள்ளிரவில் போன்
இது குறித்து சுஷ்மா அந்தாரே கூறுகையில்,”‘ஜோதிடரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பல பெண்களை சாகங்கர் மிரட்டியதாகப் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் என்னிடம் கூறினார். அதோடு புகார் அளிக்க வேண்டாம் என்று கூறி பாதிக்கப்பட்டவர்களுக்கு நள்ளிரவில் மிரட்டல் அழைப்புகள் வந்ததாகச் சிலர் என்னிடம் கூறியுள்ளனர்.
மற்றவர்களிடம் குற்றத்தைப் பற்றி புகார் செய்ய வேண்டாம் என்று அழுத்தம் கொடுக்கப்பட்டதாக என்னிடம் தெரிவித்தனர். சாகங்கர் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட கராட் ஆகியோரின் போன் அழைப்பு விபரங்களை காவல்துறை ஆய்வு செய்ய வேண்டும். அவர்கள் யாரையெல்லாம் தொடர்பு கொண்டு புகார் அளிக்க வேண்டாம் என அழுத்தம் கொடுத்தார்கள் என்பதைக் கண்டறிய வேண்டும்” என்று தெரிவித்தார்.
திரவம்?
சமூக ஆர்வலர் அஞ்சலி தமானியா இது குறித்து கூறுகையில்,” கராடின் செயல்பாடுகள் குறித்த தகவல்களை தன்னுடன் ஒரு உள் நபர் பகிர்ந்து கொண்டார். கராட் ‘ஓஷ்னோ ஜல்’ என்ற திரவத்தை தயாரிப்பதாக அவர் கூறினார். இது வயாக்ராவை போன்றதுஆகும். கராடின் வாடிக்கையாளர்களில் பல மூத்த அரசியல்வாதிகள் மற்றும் ஒரு மத அறக்கட்டளையின் அறங்காவலர் இருக்கிறார். மேலும் அவர்கள் நாசிக்கில் இருந்து ‘ஜல்’ சேகரிக்க தங்கள் கார்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை அனுப்பினர்.
அவர்களில் பலர் தங்களது வலிமையை அதிகரிக்க உதவும் ‘ஓஷ்னோ ப்ரே’ மற்றும் ‘சித்தா பிரார்த்தனை’ செய்ய கராடின் உதவியை நாடியதாக அவர் கூறினார். இப்புகார்களையடுத்து சாகங்கரை அழைத்து முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பேசினார். இதில் உடனே பதவியை ராஜினாமா செய்யும்படி கேட்டுக்கொண்டார். உடனே சாகங்கர் துணை முதல்வர் சுனேத்ரா பவாரை சந்தித்து பேசிவிட்டு தனது ராஜினாமா கடிதத்தை அவரிடம் கொடுத்தார். இது குறித்து சாகங்கர் கூறுகையில், `கராட்டை குருவாகத்தான் நினைத்தேன். அவர் மீதான புகார் பற்றி தனக்கு எதுவும் தெரியாது’ என்று தெரிவித்தார்.