மும்பை: 2024 மகளிர் டி20 உலகக் கோப்பை இரண்டு மாதங்களில் துவங்க உள்ளது. அதற்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது 15 பேர் கொண்ட உலகக்கோப்பை அணியுடன் கூடுதல் வீராங்கனைகளாக மூன்று பேர் அறிவிக்கப்பட்டுள்ளனர். வங்கதேசத்தில் வரும் அக்டோபர் மாதம் மகளிர் டி௨௦ உலகக் கோப்பை தொடர் நடைபெற இருந்தது. ஆனால், வங்கதேச நாட்டில் கலவரம் காரணமாக அசாதாரண சூழல் நிலவி வருவதால், ஐக்கிய அரபு அமீரகத்தில் மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது.
அதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 2024 டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய மகளிர் அணி பின்வருமாறு – ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), ஷபாலி வர்மா, தீப்தி ஷர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), யாஸ்திகா பாட்டியா (விக்கெட் கீப்பர்), பூஜா வஸ்திராகர், அருந்ததி ரெட்டி, ரேணுகா சிங் தாக்கூர், தயாளன் ஹேமலதா, ஆஷா சோபனா, ராதா யாதவ், ஸ்ரேயங்கா பாட்டீல், மற்றும் சஜனா சஜீவன்.
கூடுதல் வீராங்கனைகள் – உமா சேத்ரி (விக்கெட் கீப்பர்), தனுஜா கன்வர் மற்றும் சைமா தாகூர். இதுவரை இந்திய மகளிர் அணி ஒரு முறை கூட டி20 உலகக் கோப்பையை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இந்த முறை இந்திய அணி பலமாக இருக்கும் நிலையில் உலகக் கோப்பை வெல்ல வாய்ப்பு உள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.