Workout செய்ய நினைச்சாலே ஸ்ட்ரெஸ் ஆகுதா? இருக்கவே இருக்கு சிம்பிள் டெக்னிக்ஸ்! I Stressed about working out? simple techniques to handle it.

Spread the love

மனச்சோர்வு, பதற்றம், சோர்வு போன்றவற்றால் அவதிப்படுபவர்களுக்கு உடற்பயிற்சி பற்றிய எண்ணம் கூட அதிக சுமையாகவும் ஸ்ட்ரெஸ்ஸை அதிகரிப்பதாகவும் தோன்றும். ஆனால், 10 நிமிட நடைப்பயிற்சிகூட பதற்றத்தைக் குறைக்கவும், எண்ணங்களைத் தெளிவுபடுத்தவும் உதவும். அலுவலகத்திலோ, வொர்க் ஃப்ரம் ஹோமிலோ தொடர்ந்து ஒரே இடத்தில் உட்கார்ந்து ஸ்ட்ரெஸ்ஸாக வேலை பார்ப்பவர்கள் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை 5 நிமிடங்கள் எளிய உடற்பயிற்சிகளை செய்யலாம்.

நடந்துகொண்டே பேசலாம்.

நடந்துகொண்டே பேசலாம்.
Goncalo Costa

• பர்சனல் அல்லது வேலை தொடர்பான அழைப்பாக இருந்தாலும், நடந்துகொண்டே பேசலாம்.

• கம்ப்யூட்டர், லேப்டாப், டிவி பார்த்துக் கொண்டிருக்கும்போது இடையிடையே கை கால்களை நீட்டி மடக்கும் உடற்பயிற்சிகளை செய்யலாம்.

• லிஃப்டைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக படிக்கட்டுகளில் ஏறி இறங்கலாம்.

• செல்ல வேண்டிய இடங்களுக்கு சற்று தூரத்திலேயே வண்டியை நிறுத்திவிட்டு நடந்து செல்லலாம்.

• பிடித்த இசைக்கு நடனமாடலாம்

• வீட்டு வேலைகளை சுறுசுறுப்பாகச் செய்யலாம்.

இதெற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்றால், ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை 5 முதல் 10 நிமிடங்கள் அலுவலக வராந்தாவிலோ, போர்டிகோவிலோ, மாடியிலோ நடைபயிற்சி மேற்கொள்ளலாம்” என்கிறார் மருத்துவர் வி.மிருதுல்லா அபிராமி .

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *