அரியானா:
அரியானா சட்டசபையில் மொத்தம் 90 தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளை அனைத்திற்கும் வருகிற 5.-10.-2024 ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. பதிவாகும் வாக்குகள் 8.-10.-2024 தேதி எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் வெளியாகின்றன.
வினேஷ் போகத்
இதனால் ஆட்சியை கைப்பற்ற பா.ஜ.க.காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது.வேட்பாளர்கள் தேர்வு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்தநிலையில்மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் மற்றும் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஆகிய இருவரும் இன்று (வெள்ளிக்கிழமை) கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் மற்றும் மூத்த தலைவர் பவன் கேரா முன்னிலையில் காங்கிரசில் இணைந்தனர்.
வேட்பாளர் பட்டியல்
இதற்கிடையே அரியானா சட்டசபை தேர்தலுக்கான முதல் 31 வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. இதில் காங்கிரசில் இணைந்த வினேஷ் போகத் ஜூலானா தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. பூபிந்தர் சிங் ஹூடா கர்ஹி சாம்ப்லா-கிலோ தொகுதியிலும், அரியானா காங்கிரஸ் தலைவர் உதய் பன் ஹோடலில் போட்டியிடுகிறார்.
அமைச்சர்கள் மீதான சொத்துகுவிப்பு வழக்கிற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை