யமஹாவின் தொழிற்சாலை தமிழ்நாட்டில், அதுவும் சென்னையில்தான் செயல்பட்டு வருகிறது. அதனாலோ என்னவோ அதன் கவனம் மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாட்டின் மீது பதிந்து இருக்கிறது. இது பற்றி தெரிந்துகொள்ள யமஹாவின் மூத்த துணை தலைவர் ரவிந்தர் சிங்கிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

“2025-ஆம் ஆண்டில் யமஹாவின் மொத்த இந்திய விற்பனையில் சுமார் 25% பங்களிப்பை தமிழ்நாடு வழங்கியுள்ளது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம், தமிழ்நாட்டை மட்டும் எடுத்துப் பார்த்தால், அதில் சென்னை நகரம் மட்டும் 27% விற்பனையைத் தந்துள்ளது. யமஹாவுக்குத் தமிழ்நாடு என்பது எப்போதுமே ஒரு பிரீமியம் மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் சந்தை.”
“தமிழ்நாடு முழுவதும் தற்போது சுமார் 100 ‘Blue Square’ எக்ஸ்க்ளூசிவ் ஷோரூம்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த Blue Square ஷோரூம்கள் என்பது வெறும் விற்பனை மையங்கள் மட்டுமல்ல; யமஹாவின் முன்னணி பைக்குகள், ஸ்கூட்டர்கள், அசல் உதிரிபாகங்கள் அப்பேரல்ஸ் விற்பனை, சர்வீஸ், கம்யூனிட்டி அனுபவம்
எல்லாம் ஒரே இடத்தில் கிடைக்கும் ஆல்-இன்-ஒன் டெஸ்டினேஷன் அது. மேலும், Blue Streaks ரைடர்களுக்கான கம்யூனிட்டி மையங்களாகவும் இவை செயல்படுகின்றன. ரைட்ஸ், இவென்ட்ஸ் மூலம் யமஹா ரசிகர்கள் ஒன்றிணையும் இடமாக இந்த ஷோரூம்கள் மாறியுள்ளன.
தமிழ்நாடு முழுவதும் Tier-2, Tier-3 நகரங்களில் Blue Square நெட்வொர்க்கை மேலும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம். ‘Call of the Blue’ என்ற எங்கள் முழக்கத்தின் நோக்கமே, எங்கு யமஹா வாடிக்கையாளர் இருந்தாலும், அங்கு ஒரே மாதிரியான பிரீமியம் அனுபவம் கிடைக்க வேண்டும் என்பதுதான். அனைத்து யமஹா அவுட்லெட்களையும் Blue Square-ஆக மாற்றுவதுதான் எங்கள் குறிக்கோள்.
அதேப் போல Blue Streaks ரைடிங் கம்யூனிட்டியை விரிவுபடுத்துவது, Track Days, COTB Weekends, கம்யூனிட்டி ஈவென்ட்ஸ் போன்ற ரைடர்-சென்ட்ரிக் செயல்பாடுகளிலும் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம்.
மேலும், Yamaha Training Academy மூலம் முன்கள ஊழியர்களுக்கு தொடர்ச்சியான பயிற்சி அளித்து, அனைத்து டச் பாயின்ட்களிலும் ஒரே மாதிரியான உயர்தர சேவையை உறுதி செய்கிறோம்.” என்கிறார்,