யோகி பாபு நடிக்கும் போட் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இம்சை அரசன் 23-ம் புலிகேசி’, அறை எண் 305-இல் கடவுள் உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் சிம்புதேவன்.
இவரது இயக்கத்தில் வெளியான ‘கசடதபற’ படம் சிறந்த திரைக்கதைக்கான பல விருதுகளை பெற்றது. தற்போது இவர் இயக்கி வரும் படம் ‘போட்’.
மாலி அண்ட் மான்வி மூவி மேக்கர்ஸ் சார்பில் பிரபா பிரேம்குமாரின் தயாரிப்பில் உருவாகி வருகிறது இப்படம். முழுக்க முழுக்க கடலில் நடக்கும் கதையாக இதன் திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது.
படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவுவை கவனிக்கிறார்.
Presenting our next association for the release of @iyogibabu & Director @chimbu_deven’s #Boat !!
A Survival Thriller releasing in theatres on Aug 2ndProduced by @maaliandmaanvi & @cde_off
A @SakthiFilmFctry @sakthivelan_b release#முழுக்க_முழுக்க_கடலில் #BoatFromAug2nd… pic.twitter.com/5vN8UDVRh0
— Sakthi Film Factory (@SakthiFilmFctry) July 8, 2024
இப்படத்தில் யோகி பாபு, கெளரி ஜி கிஷன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது.
போட் படத்தின் டீசர் சென்றாண்டு வெளியான நிலையில், கடந்த பிப்ரவரியில் இப்படம் வெளியாகும் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில், போட் திரைப்படம் வரும் ஆக. 2 ஆம் தேதி வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.