Your words are enough to end my life: Female dentist commits suicide in Mumbai – `உனது வார்த்தைகள் என் வாழ்க்கையை முடித்துக்கொள்ள போதுமானது’ – மும்பையில் பெண் பல் டாக்டர் தற்கொலை

Spread the love

மும்பை அண்டாப்ஹில் பகுதியை சேர்ந்த ஸ்துதி சோனாவானே, பல் மருத்துவம் படித்துள்ளார். அவர் இப்போது முதுகலைப் படிப்பு படித்து வந்தார். சோனாவானே பைசுல் முகமது கான் என்பவரை காதலித்து வந்தார். அவர்களுக்குள் சமீப காலமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது.

சம்பவத்தன்று இரவு 7 மணியளவில் அவரது பெற்றோர் ஒரு உணவகத்தில் சாப்பிட சென்றனர். அப்போது சோனாவானே வீட்டில் தனியாக இருந்தார். அவர் அவர்கள் சென்றவுடன் தனது அறைக்குள் சென்றார். அவரது பெற்றோர் ஏதாவது உணவு வாங்கி வரவேண்டுமா என்று கேட்டனர். ஆனால் தனக்கு எதுவும் வேண்டாம் என்று தெரிவித்துவிட்டார்.

இரவில் சாப்பிட்டுவிட்டு பெற்றோர் வீடு திரும்பி வந்தபோது, ​​தங்கள் மகளின் அறையில் விளக்கு எரிந்து கொண்டிருப்பதைக் கவனித்தனர். அவர் படித்துக்கொண்டிருப்பதாக நினைத்து, அவரை தொந்தரவு செய்யவில்லை.

இருப்பினும், மறுநாள் காலை 10 மணி வரை அவரது அறைக்கதவைத் திறக்காததால், பெற்றோர் கவலையடைந்து கதவை உடைத்து உள்ளே சென்றபோது, ​​சோனாவானே தனது தாவணியில் தூக்கிப்போட்டு இருந்தார். அவரை உடனே பெற்றோர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்திருந்தார்.

இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சோனாவானே தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு ஆறு பக்கங்கள் கொண்ட கடிதம் ஒன்றை எழுதி வைத்திருந்தார். அந்த கடிதத்தில், தானும் பைசுலும் ஓராண்டிற்கும் மேலாக ஒன்றாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். அவர்கள் பல மகிழ்ச்சியான தருணங்களைப் பகிர்ந்து கொண்டாலும், அவர் தன்னைத் தொடர்ந்து அவமதித்ததாகவும் இழிவுபடுத்தியதாகவும் சோனாவானே தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதில் அவர், “உன்னுடைய வார்த்தைகள் மிகவும் சக்திவாய்ந்தவை, என் வாழ்க்கையை முடித்துக்கொள்ள அவை மட்டுமே போதுமானதாக இருந்தன. நான் உணர்ச்சியற்றவளாக உணர்கிறேன். என்னால் எதையுமே புரிந்து கொள்ள முடியவில்லை. நீ மகிழ்ச்சியாக இருப்பாய் என்றும், உன்னுடைய ஆணாதிக்கம் திருப்தியடைந்திருக்கும் என்றும் நம்புகிறேன். நான் எப்போதும் இல்லாத அளவிற்கு மிகவும் மனச்சோர்வடைந்துள்ளேன்,” என்று எழுதியுள்ளார். அக்கடிதத்தின் அடிப்படையில் அப்பெண்ணின் காதலனை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தற்கொலை தடுப்பு மையம்

தற்கொலை தடுப்பு மையம்

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *