Youth: " 'அசுரன்' படத்தில நடிக்க கென் வேண்டாம்'னு வெற்றி கிட்ட சொன்னேன், ஏன்னா.!"- தனுஷ் ஷேரிங்

Spread the love

கென் கருணாஸ் ‘அசுரன்’, ‘விடுதலை 2’, ‘வாத்தி’ போன்ற படங்களில் நடித்து மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்திருந்தார்.

இதனிடையே தனுஷின் சில படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றினார். தற்போது ‘யூத்’ படத்தை இயக்கி இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.

இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். அனிஷ்மா, தேவதர்ஷினி மற்றும் சுராஜ் வெஞ்சாரமூடு உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர்.

 'யூத்' படம்
‘யூத்’ படம்

இந்தப் படம் மார்ச் 19-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் ப்ரி- ரிலீஸ் ஈவன்ட் இன்று ( மார்ச். 13) நடைபெற்றிருக்கிறது.

இதில் கலந்துகொண்டு பேசியிருக்கும் தனுஷ், ” கென் கருணாஸை முதல்ல நான் ‘அசுரன்’ படத்திற்காக எடுக்கப்பட்ட போட்டோ சூட்டிலத் தான் பார்த்தேன்.

பார்த்தவுடனே இவன் இதற்கு செட் ஆக மாட்டா’ன்னு வெற்றி மாறனிடம் சொன்னேன்.

உருண்டையா, பெருசா இருக்கான், மகன் கதாபாத்திரத்திற்கு செட் ஆக மாட்டான். வேறு யாரையாவது நடிக்க வைங்க என்றேன்.

அதற்கு வெற்றி ‘கொஞ்சம் டைம் கொடுங்க தனுஷ் அவனை வெயிட் கம்மி பண்ணிட்டு வரச்சொல்கிறேன்’ என்றார். ஓகே வெற்றி சார்’ன்னு சொல்லிட்டேன்.

அதுக்கு அப்பறம் நான் கென்னை பார்க்கவே இல்ல. நேரடியா ‘அசுரன்’ படத்தோட முதல் நாள் படப்பிடிப்பில தான் பார்த்தேன்.

தனுஷ்
தனுஷ்

முதல் ஷாட்டிலேயே அவன் நடிச்சதை பார்த்து இவன் கிட்ட ஏதோ ஒரு திறமை இருக்கு’ன்னு வெற்றி கிட்ட சொன்னேன்.

சின்ன பையனா இருக்கான், ஆனா எல்லார் முன்னாடியும் எந்தத் தயக்கமும் இல்லாம நல்லா நடிக்கிறான். சரியான தேர்வுதான் வெற்றி’ன்னு சொன்னேன்.

அதனால கென்னை கண்டுப்பிடிச்ச பெருமை முழுக்க முழுக்க வெற்றிமாறனுக்குத் தான். எனக்கு இல்ல.

அவன் எனக்கு பப்ஜி ப்ரெண்ட். அதுக்கு அப்பறம் கென்னும் நானும் நெருக்கம் ஆயிட்டோம்” என்று கென் குறித்து தனுஷ் பேசியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *