Youth : “இவரைப் பார்த்தப் பிறகுதான் தொழில் மீது பக்தி வந்தது” – நடிகர் சூரஜ் குறித்து நடிகை நளினி | Actress Nalini talk about Actor Sooraj.

Spread the love

நடிகரும், இயக்குநருமான கென் இயக்கத்தில், கருப்பையா தயாரிப்பில் உருவானப் படம் யூத். இந்தப் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று, வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் படத்தின் வெற்றி விழா நேற்று சென்னையில் நடந்தது.

அதில் நடிகை நளினி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, “நமது தயாரிப்பாளர் கருப்பையா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். மறைந்த பாடகர் எஸ்.பி.பி சாருக்குப் பிறகு, மூச்சு விடாமல் அத்தனை பேரின் பெயர்களையும் மறக்காமல் மேடையில் நன்றி சொன்ன பெருமை இவரையே சாரும். வாகினி பிரசாத், ஏவிஎம் போன்ற ஒரு பெரிய நிறுவனமாக உங்கள் தயாரிப்பு நிறுவனம் வளர வாழ்த்துகிறேன்.

கென் கருணாஸ்

கென் கருணாஸ்

சூரஜ் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும். அவருடைய படங்களைப் பார்க்கும்போதெல்லாம் அவரை ஒருமுறையாவது சந்திக்க மாட்டோமா என்று ஏங்கியிருக்கிறேன். அவரோடு நடிக்கும்போது, அந்தத் தொழில் மீது அவர் வைத்திருக்கும் பக்தியைக் கண்டு வியந்தேன். ஏதேனும் ஒரு சின்ன தவறு நடந்தால் கூட, ஒன் மோர் என்று கேட்டு அந்தத் தமிழ் வார்த்தைகளைச் சரியாகப் பேச அவர் காட்டிய ஆர்வம் எனக்கு ஒரு பாடமாக அமைந்தது. அவரைப் பார்த்த பிறகுதான் இந்தத் தொழிலின் மீது எனக்கும் பெரிய பக்தி வந்தது. இந்தப் படத்தில் அந்தப் பாத்திரத்தை அவரைத் தவிர வேறு யாராலும் இவ்வளவு அழகாகச் செய்திருக்க முடியாது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *