கென் கருணாஸ் இயக்கத்தில் வெளியான ‘யூத்’ படத்தின் சக்சஸ் மீட் நேற்று (மார்ச்.31) நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் சுராஜ் வெஞ்சராமூடு, ” ‘யூத்’ படம் எனக்கு ஒரு நல்ல அனுபவத்தைத் தான் கொடுத்தது. அதற்கு இயக்குநர் கென்னுக்கு நன்றி.

அவர் இயக்குநர் மட்டும் அல்ல. பிறவி நடிகரும் கூட. கதை சொல்லும் போது அவரிடம் ஒரு ஃபயர் இருந்தது. அந்த ஃபயர் தான் உங்களுடைய வெற்றி. இது மட்டுமல்ல இதை விட இன்னும் உயரத்துக்கு நீங்கள் செல்வீர்கள்.
இப்போது நான் உங்களுடைய ரசிகன் ஆகிவிட்டேன். இந்தப் படத்தின் தயாரிப்பாளர் இதைவிட பெரிய புரொட்யூசர் ஆகிவிடுவார், வாழ்த்துகள் கருப்பையா. என்னுடன் பணியாற்றிய நளினி மேடம், தேவதர்ஷினி மேடம் எல்லோருக்கும் நன்றி.
படப்பிடிப்பில் எனக்கு ஏதாவது டயலாக் இருக்கும் நாளில் கென் உன்னிடம் சரியாக பேசி இருக்க மாட்டேன். அதற்கு காரணம் எனக்கு வசனம் மறக்க கூடாது என்பதுதான்.
மலையாளத்தில் படம் நடிக்கும் போது வசனத்தை வேகமாக கொடுங்கள் என்பேன். இங்கு வசனம் கொடுக்கும் போது `என்னடா நாளைக்கே படம் ரிலீஸ் பண்ண போறியா, கொஞ்சம் டைம் கொடுடா’ என்பேன்.

அந்த டென்ஷனில் தான் நான் பேசி இருக்க மாட்டேன். இந்தப் படத்தை பார்த்துவிட்டு ஒரு பெரிய ஹீரோ போன் செய்தார். அது வேறு யாரும் இல்லை சிலம்பரசன் சார் தான்.
இந்தப் படத்தை மிகவும் பாராட்டி பேசினார். சிலம்பரசன் சாருக்கும், இந்தப் படத்துக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி” என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.