Yumnam Khemchand: மணிப்பூரின் புது முதலமைச்சர்? மெய்தி, குக்கியை பேலன்ஸ் செய்யும் பாஜக – எப்படி? | BJP’s Manipur Reset: Meitei CM, Kuki Deputy

Spread the love

2023-ம் ஆண்டு மே மாதம் மணிப்பூரில் குக்கி இன மக்களுக்கும், மெய்தி இன மக்களுக்கும் கலவரம் தொடங்கியது.

கொலைகள், பாலியல் வன்கொடுமைகள் என அந்தப் பகுதியில் பல்வேறு கொடூரங்கள் நடந்தேறிக்கொண்டே இருந்தன.

இந்தக் கலவரத்தைத் தடுக்க தவறிவிட்டார் என்றும்… கலவரத்தைச் சரிவர கையாளவில்லை என்று அந்த மாநிலத்தின் அப்போதைய முதலமைச்சர் பிரேன் சிங்கின் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதையடுத்து, அவர் கடந்த ஆண்டு பிப்ரவரி 9-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதன் பின், மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்தது.

யும்னம் கெம்சந்த் சிங் | Yumnam Khemchand

யும்னம் கெம்சந்த் சிங் | Yumnam Khemchand
Yumnam Khemchand | Facebook

ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்து கிட்டத்தட்ட ஓராண்டு ஆகிறது. இப்போது மணிப்பூரின் பாஜக தலைவராக யும்னம் கெம்சந்த் சிங் பதவியேற்றுள்ளார்.

அடுத்ததாக, இவர் மணிப்பூரின் முதலமைச்சராக பதவியேற்கவுள்ளார்.

PTI-ன் தகவலின் படி, பெண் தலைவரான நெம்சா கிப்கென் துணை முதலமைச்சராக பதவியேற்க உள்ளார்.

யும்னம் கெம்சந்த் சிங் மெய்தி இனத்தைச் சேர்ந்தவர் ஆவார். நெம்சா கிப்கென் குக்கி இனத்தைச் சேர்ந்தவர். இரு இனங்களுக்கு இடையே பேலன்ஸ் செய்யவே, பாஜக இந்த முடிவு எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *