அசாம்: அரசு மகளிர் காப்பகத்தில் ஹோலி கொண்டாடிய ஆளுநர்!

Dinamani2f2025 03 142furj5qq6l2fassam Guv.jpeg
Spread the love

வடகிழக்கு மாநிலமான அசாமின் ஆளுநர் அம்மாநில அரசின் மகளிர் காப்பகத்தில் வசிப்பவர்களுடன் ஹோலி பண்டிகையை கொண்டாடியுள்ளார்.

குவாஹட்டி மாவட்டத்தின் ஜலுக்பாரி பகுதியிலுள்ள அரசு மகளிர் காப்பகத்தில் வசிப்பவர்களுடன் அம்மாநில ஆளுநர் லக்‌ஷ்மன் பிரசாத் ஆச்சாரியா, இன்று (மார்ச் 14) ஹோலி பண்டிகையை கொண்டாடியுள்ளார்.

இதுகுறித்து வெளியான அறிக்கையில், அங்கு வசிக்கும் பெண்களிடையே மகிழ்ச்சியைப் பரப்பவும், சொந்தம் என்ற உணர்வை ஊக்குவிக்கவும் ஆளுநர் அவர்களுடன் ஹோலி பண்டிகை கொண்டாடியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: கன்னட நடிகை ரன்யா ராவின் ஜாமீன் மனு தள்ளுபடி

இதனைத் தொடர்ந்து, ஆளுநர் லக்‌ஷ்மன் பிரசாத் அந்த காப்பகத்தில் வசிக்கும் பெண்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் பரிசுக்களையும் வழங்கினார்.

மேலும், அங்கு வசிக்கும் பெண்கள் வாழ்க்கையின் நேர்மறையான விஷயங்களில் கவனம் செலுத்துமாறும், ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபட்டு நம்பிக்கையுடன் இருக்குமாறும் அவர் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, நீர் செடிகளிலிருந்து பல்வேறு பொருள்களை தயாரிப்பதில் அவர்களின் திறமைகளையும் படைப்பாற்றலையும் குறிப்பிட்டு அவர் பாராட்டினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *