புதுதில்லி: அதானி வில்மர் நிறுவனத்தின் நிகர லாபம், 2024 – 25 ஆம் நிதியாண்டில், இரண்டு மடங்கு அதிகரித்து ரூ.410.93 கோடி ஆக உள்ளது.
கடந்த ஆண்டு இதே காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.200.89 கோடியாக இருந்தது. நிறுவனத்தின் மொத்த வருமானம் ரூ.12,887.21 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.16,926 கோடியானது.
சமையல் எண்ணெய் பிரிவின் வருவாய் ரூ.9,710.82 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.13,386.71 கோடியானது. அதே வேளையில் உணவு மற்றும் எஃப்எம்சிஜி பிரிவின் வருவாய் ரூ.1,273 கோடியிலிருந்து ரூ.1,558 கோடியாகவும், தொழில்துறை அத்தியாவசிய வருவாய் ரூ.1,844.12 கோடியிலிருந்து ரூ.1,914.59 கோடியாகவும், செலவினம் ரூ.12,606.26 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.16,379.76 கோடியானது.