அதிமுகவில் நான் சாதாரண தொண்டன்: செங்கோட்டையன்

Dinamani2f2025 02 172fzemeu3kp2fsengottaiyan Admk Edi.jpg
Spread the love

அதிமுகவில் தான் சாதாரண தொண்டன் என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

2026 சட்டப்பேரவை தேர்தலையொட்டி அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பெயர் பட்டியல் இன்று (பிப். 17) வெளியானது. இதில் செங்கோட்டையனின் பெயர் இடம்பெறவில்லை.

இந்நிலையில் திருச்சியில் இது குறித்து செய்தியாளர்களுடன் செங்கோட்டையன் பேசியதாவது,

”தொடர்ந்து வெற்றி பெற்ற அந்தியூர் சட்டப்பேரவைத் தொகுதியில் துரோகிகள் சிலரால் தோல்வி ஏற்பட்டது என்று கூறியிருந்தேன். அந்தியூர் தொகுதியை மட்டும் தான் குறிப்பிட்டேனே தவிர வேறு எந்தத் தொகுதியையும் குறிப்பிடவில்லை” எனக் குறிப்பிட்டார்.

மேலும், ஓ. பன்னீர்செல்வம் அணியில் இடம்பெறவுள்ளதாக எழுந்த பேச்சுக்கள் குறித்து பேசிய அவர்,

”அதைப் பற்றி அவர்களிடம் (ஓ. பன்னீர் செல்வம் அணி) தான் கேட்க வேண்டும். அமைதியாக அவரவர் தங்கள் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தால் அதுவே நல்லது. அதிமுகவில் நான் ஒரு சாதாரண தொண்டன்” எனக் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க | அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியல்! செங்கோட்டையன் பெயர் இடம்பெறவில்லை!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *