அரசுப் போக்குவரத்துக் கழகம் ஒருபோதும் தனியார் மயமாகாது: அமைச்சர் சிவசங்கர்

Dinamani2f2025 04 122f8pzb6mqn2fminister Ss.jpg
Spread the love

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் ஒருபோதும் தனியார் மயமாகாது என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

கோவையில் இன்று நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் பேருந்துகளில் மகிழ்ச்சியாக பயணம் செய்ய போக்குவரத்துக் கழக ஊழியர்கள் கடுமையாக உழைத்து வருகிறார்கள். பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் கூட அவர்கள் கொண்டாட்டத்தை மறந்து பொதுமக்களுக்காக உழைத்து வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் அரசுப் பேருந்து மூலம், பண்டிகை காலங்களில் சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்த நிலையில் போக்குவரத்துக் கழக ஊழியர்களின் உழைப்பால் 19 விருதுகளை போக்குவரத்துக் கழகம் பெற்று உள்ளது. இதற்கிடையே போக்குவரத்துத் துறையை தனியார் மயமாக்குவார்கள் என்று சிலர் வதந்தியும் பரப்புகிறார்கள். அவ்வாறு ஒரு நளும் நடைபெறாது. அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு 487 பணியிடங்கள் நிரப்பப்பட்டு உள்ளது. 2000 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. 1000 பேருக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக ஆயிரம் கோடி ரூபாய் போக்குவரத்துத் துறைக்கு ஒதுக்கப்படுகிறது.

அதிமுகவை மிரட்டி பணிய வைத்திருக்கிறது பாஜக: தொல்.திருமாவளவன்

இதற்கு முன்பு பழைய பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. இப்போது 1,1000 புதிய பேருந்துகள் படிப்படியாக இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் நலிவடைந்த நிலையில் இருந்த அரசுப் போக்குவரத்துக் கழகம் இன்று புத்துயிர் பெற்று வருகிறது. எனவே தனியார் மயம் என்ற தகவல் தவறானது. தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் பொதுத்துறை நிறுவனமாகவே தொடர்ந்து செயல்படும். இப்போது அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பெண்களும் நடத்துநர்களாக பணியில் செயல்பட்டு வருகிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *