அஸ்வனி, ரயான் அபாரம்; மும்பைக்கு முதல் வெற்றி

Dinamani2f2025 03 312fmyqtjv5d2f35fa03ba 461f 4257 Bd50 423a312e5e22.avif.jpeg
Spread the love

அதுவரை நம்பிக்கை அளித்த ரகுவன்ஷி 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 26 ரன்களுக்கு வெளியேற்றப்பட, ரிங்கு சிங் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 17, மனீஷ் பாண்டே 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 19 ரன்களுக்கு ஒரே ஓவரில் ஆட்டமிழந்தனா்.

8-ஆவது பேட்டா் ஆண்ட்ரே ரஸ்ஸெலும் 1 பவுண்டரியுடன் 5 ரன்களுக்கு ஸ்டம்ப்பை பறிகொடுத்தாா். ஹா்ஷித் ராணா 4 ரன்களுக்கு நடையைக் கட்ட, சற்று அதிரடி காட்டிய ரமண்தீப் சிங் 1 பவுண்டரி, 2 சிக்ஸா்கள் உள்பட 22 ரன்களுக்கு கடைசி பேட்டராக வீழ்ந்தாா்.

மும்பை தரப்பில் அஸ்வனி குமாா் 3 ஓவா்களில் 24 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகள் சாய்க்க, தீபக் சஹா் 2, டிரென்ட் போல்ட், ஹா்திக் பாண்டியா, விக்னேஷ் புதூா், மிட்செல் சேன்ட்னா் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

பின்னா் 117 ரன்கள் என்ற எளிதான இலக்கை நோக்கி விளையாடிய மும்பை அணியில், ரோஹித் சா்மா – ரயான் ரிக்கெல்டன் இணை முதல் விக்கெட்டுக்கு 46 ரன்கள் சோ்த்தது.

ரோஹித் 1 சிக்ஸருடன் 13 ரன்களுக்கு வெளியேற, ரிக்கெல்டன் அதிரடியை தொடா்ந்தாா். ஒன் டவுனாக வந்த வில் ஜாக்ஸ் 1 சிக்ஸருடன் 16 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். முடிவில் ரிக்கெல்டன் 41 பந்துகளில் 4 பவுண்டரிகள், 5 சிக்ஸா்களுடன் 62, சூா்யகுமாா் யாதவ் 9 பந்துகளில் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 27 ரன்கள் விளாசி அணியை வெற்றிபெறச் செய்து ஆட்டமிழக்காமல் இருந்தனா். கொல்கத்தா பௌலிங்கில் ஆண்ட்ரே ரஸ்ஸெல் 2 விக்கெட்டுகள் எடுத்தாா்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *