ஆஸ்கர் மேடையில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக எழுந்த குரல்!

Dinamani2f2025 03 032fy7ptfgkd2foscar Palestine Edi.jpg
Spread the love

இஸ்ரேல் – பாலஸ்தீன போரை நிறுத்தக் கோரி ஆஸ்கர் மேடையில் பிரபங்கள் பேசிய விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

2025-ம் ஆண்டுக்கான 97-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்றது.

இதில், சிறந்த திரைக்கதை, படத்தொகுப்பு, இயக்குநர், நடிகை, திரைப்படம் என மொத்தமாக 5 விருதுகளை அனோரா திரைப்படம் வென்றது.

இந்த விழாவில், சிறந்த ஆவணப்படத்திற்கான ஆஸ்கர் விருது நோ அதர் லேண்ட் படத்திற்கு வழங்கப்பட்டது.

இந்த விருதை இஸ்ரேலிய பத்திரிகையாளர் யுவல் ஆபிரகாம், பாலஸ்தீனிய பத்திரிகையாளர் பாஸல் அட்ரா, ஹம்டன் பல்லால் மற்றும் ரேச்சல் சோர் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

விருதைப் பெற்றுக்கொண்ட பாஸல் அட்ரா பாலஸ்தீன மக்கள் பாதிக்கப்படுவது குறித்து பேசிய விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

மேடையில் அவர் போரைக் குறிப்பிட்டு, காஸா போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். பாலஸ்தீன மக்களின் இன அழிப்பை நிறுத்த வேண்டும். இதற்கு உலக நாடுகள் ஒன்றிணைந்து சீரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *