உக்ரைன் போரில் ரஷிய ராணுவத்தில் சோ்ந்த 16 இந்தியா்களை காணவில்லை: மத்திய அரசின் அதிர்ச்சி பதில்

Dinamani2f2025 02 092fme87p2cv2fuw.jpg
Spread the love

புது தில்லி: உக்ரைன் மீதான ரஷிய போரில் அந்நாட்டு ராணுவத்தில் சோ்ந்த இந்தியா்களில் 16 பேரைக் காணவில்லை என ரஷியா தெரிவித்துள்ளதாக வெளியுறவுத்துறை இணை அமைச்சா் கீா்த்தி வரதன் சிங் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக மக்களவையில் தமிழக எம்.பி.க்களான நானும், தயாநிதி மாறன் ஆகியோா் எழுப்பிய கேள்விகளுக்கு வெளியுறவு இணை அமைச்சர் கீர்த்தி வரதன் சிங் அளித்துள்ள பதில் அதிர்ச்சி தருகிறது சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர்கள் எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

ரஷிய உக்ரைன் போரில் ரஷிய ராணுவத்தில் சேர்ந்த இந்தியர்களின் உயிர் இழப்பு, பாதுகாப்பு பற்றி நாடாளுமன்றத்தில் நானும், தயாநிதி மாறன் எம்பி அவர்களும் எழுப்பிய கேள்விக்கு (எண் 903 /7.2.2025) வெளியுறவு இணை அமைச்சர் கீர்த்தி வரதன் சிங் அளித்துள்ள பதில் அதிர்ச்சி தருகிறது.

எவ்வளவு பேர் ரஷிய ராணுவத்தில் சேர்ந்தார்கள், எத்தனை பேர் நாடு திரும்பி இருக்கிறார்கள், எத்தனை பேர் உயிரிழந்துள்ளார்கள் என்ற தகவல் அமைச்சர் பதிலில் இல்லை. 18 பேர் இன்னும் ரஷிய ராணுவத்தில் நீடிப்பதாகவும் அதில் 16 பேரின் இருப்பிடம் தெரியவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ரஷிய நிர்வாகத்தின் உயர் மட்ட அளவிலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் தொடர்ந்து பேசி வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்திய வீரர்களின் பாதுகாப்பு, உடல்நலம், ராணுவத்தில் இருந்து விடுவிப்பு, தாயகம் திரும்புதல் ஆகியன பற்றி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். அவா்களில் எவரேனும் உயிரோடு இல்லாவிடில் அவர்களது சடலங்களை கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சொல்லி இருப்பது நிலைமையின் கடுமையை விளக்குகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *