கிழக்கு லடாக்கில் புதிய ராணுவப் பிரிவு!

Dinamani2f2025 03 272f884qmr1g2fnewindianexpress2025 03 260wh5udesnew Army Division.avif.avif
Spread the love

கிழக்கு லடாக்கின் முக்கியப் பகுதியில், இந்திய ராணுவத்தின் ஒரு பிரிவை நிரந்தரமாக நிலைநிறுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆர்பட் (ORBAT – ஆயுதப்படைகளில் ஒரு பிரிவு) நடவடிக்கை பிரிவு 72 என்று அழைக்கப்படுவதுடன், பெரிய நடவடிக்கையாகவும் இருக்கும் என்று கூறுகின்றனர். கிழக்கு லடாக்கில் ஒரு நிரந்தரப் பிரிவை நிறுத்துவது, இந்திய ராணுவத்தின் முக்கியப் படியாகும். 832 கி.மீ. நீளமுள்ள இந்திய – சீன எல்லையை பாதுகாக்கும் பொறுப்பில், ஏற்கெனவே ஒரு பிரிவு உள்ள நிலையில், மேலும் புதிதாய் பிரிவு சேர்க்கப்படவுள்ளது.

2020, மே மாதத்தில் பாங்கோங் ஏரி அருகே இந்தியா – சீனா இடையே மோதல் ஏற்பட்டது. தொடர்ந்து, ஜூன் மாதத்தில் பெரிய தாக்குதலும் நடத்தப்பட்டது. இறுதியாக, கடந்தாண்டில்தான் பேச்சுவார்த்தையின் மூலம் பிரச்னை தீர்ந்தது. இந்த நிலையில்தான், கிழக்கு லடாக் பகுதியில் இந்திய ராணுவப் பிரிவு நிறுத்தப்படவுள்ளது.

இந்தப் பிரிவில் மேஜர் ஜெனரல் தலைமையில் 10,000 முதல் 15,000 வீரர்கள் மற்றும் 3 முதல் 4 படைகள் இருக்கும்; படையில் தளபதி தலைமையில், 3,500 முதல் 4,000 வீரர்கள் இருப்பர். இதுகுறித்த தகவலில் தெரிவித்ததாவது, தலைமையகம் எழுப்பப்பட்டு வருகிறது; ஒரு படைப்பிரிவு தலைமையகம் ஏற்கனவே கிழக்கு லடாக்கில் நிறுத்தப்பட்டு செயல்படத் தொடங்கியுள்ளது.

மேலும், இந்த பிரிவுக்காக வீரர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்படுகிறது. உலகின் மிக முக்கியமான எல்லைகள் மற்றும் போர்க்களங்களில் சிலவற்றைக் கையாளும் படைப்பிரிவான 14 ஃபயர் அண்ட் ஃப்யூரி கார்ப்ஸின்கீழ், பிரிவு 72 நிரந்தரமாக நிலைநிறுத்தப்படும். பிரிவு 72, தற்போது சீருடைப் படையால் பராமரிக்கப்பட்டு வருகிறது. சீருடைப் படையும், ரியாசியில் உள்ள அதன் முந்தைய இடத்துக்கு விரைவில் மாற்றப்படும்.

– மயங்க் சிங்

இதையும் படிக்க: வெளிநாட்டு முதலீட்டை அதிகரிக்கும் இந்தியா!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *