சர்தார் – 2 டீசர்!

Dinamani2f2025 03 312fh8m3vze02fcapture.png
Spread the love

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவான சர்தார் – 2 படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிக்கும் சர்தார் – 2 திரைப்படம் பெரிய பொருள் செலவில் உருவாகி வருகிறது. இதில், நடிகர்கள் எஸ். ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

சென்னை, மைசூர் மற்றும் பிற பகுதிகளில் நடைபெற்று வந்த படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது. மைசூர் படப்பிடிப்பின்போது கார்த்திக்கு காயம் ஏற்பட்டதால் தற்போது ஓய்வில் இருக்கிறார்.

இதையும் படிக்க: மோகன்லாலுக்கே பாதுகாப்பு இல்லை… பாஜகவை விமர்சிக்கும் ரசிகர்கள்!

சீனா – இந்தியா உளவுத்துறை கதையாக உருவாகிவரும் இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டரை இன்று காலை வெளியிட்டிருந்த நிலையில் படத்தின் முன்னோட்ட விடியோவை தற்போது வெளியிட்டுள்ளன.

கார்த்தி, எஸ்ஜே சூர்யாவின் அறிமுகம், சாம் சிஎஸ் பின்னணி இசை என டீசர் ரசிகர்களிடம் ஆவலை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *