ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் திடலில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
இந்தப் போட்டியில், 51 டாட் பந்துகளை சிஎஸ்கே விளையாடியதன் மூலம், சென்னையில் 25,500 மரங்கள் நடப்படவுள்ளது. ஒரு டாட் பந்துக்கு 500 மரங்கள் நடப்படும் என்ற கணக்கில், 25,500 மரங்கள் நடப்பட வேண்டும்.
போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, சிஎஸ்கே முதலில் விளையாடியது.
20 ஓவர்களின் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் 9 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்கள் எடுத்துள்ளது. 104 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களமிறங்குகிறது.