சேப்பாக்கத்தில் சிஎஸ்கேவுக்கு சாதகமான சூழல் இல்லையா? புஜாராவுக்கு அதிர்ச்சியளித்த ஃபிளெமிங்!

Dinamani2f2025 03 292fyk98qhqz2fpujara.jpg
Spread the love

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வியடைந்தது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் புஜாரா பேசியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் சிஎஸ்கேவை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இதையும் படிக்க: அதிரடியாக விளையாட எங்களிடம் வீரர்கள் இருக்கிறார்கள், தப்பு கணக்கு வேண்டாம்: சிஎஸ்கே பயிற்சியாளர்

17 ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸின் கோட்டையாக திகழ்ந்த சேப்பாக்கம் திடலில் சிஎஸ்கே தோல்வியடைந்ததால், அந்த அணியின் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்தனர். சிஎஸ்கே தோல்வியடைந்தது ஒருபுறமிருக்க, சேப்பாக்கம் திடலில் விளையாடுவதால் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எந்த ஒரு சாதகமான சூழலும் கிடையாது என அந்த அணியின் பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃபிளெமிங் தெரிவித்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

புஜாரா கூறியதென்ன?

சென்னை சூப்பர் கிங்ஸின் பலத்தை கவனத்தில் கொண்டு எப்போதும் போட்டிக்கான ஆடுகளங்கள் தயாராகும் நிலையில், சேப்பாக்கம் திடலில் விளையாடுவதால் சிஎஸ்கேவுக்கு எந்த ஒரு சாதகமான சூழலும் இல்லை என ஸ்டீஃபன் ஃபிளெமிங் கூறுவது ஆச்சரியமளிப்பதாக புஜாரா தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இதையும் படிக்க: தோல்விக்குக் காரணம் தோனியா? சிஎஸ்கே ரசிகர்கள் விமர்சனம்!

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான போட்டி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்த ஒரு குறையும் கூற முடியாது. தங்களது பலத்துக்கு ஏற்றவாறே சிஎஸ்கே அணிக்கான ஆடுகளம் தயார் செய்யப்படுகிறது. சேப்பாக்கம் திடலில் சிஎஸ்கேவுக்கு எந்த ஒரு சாதகமான சூழலும் கிடையாது என ஃபிளெமிங் கூறுவது சற்று ஆச்சரியமாக இருக்கிறது.

சிஎஸ்கேவின் பேட்டிங் வரிசையில் நிறைய விஷயங்களுக்கு கவனம் கொடுக்கப்பட வேண்டும். ரச்சின் ரவீந்திரா மற்றும் ருதுராஜ் கெய்க்வாட்டினை தவிர்த்து மற்ற வீரர்கள் சிறப்பாக செயல்பட தவறுகிறார்கள். அணியின் மிடில் ஆர்டர் நன்றாக விளையாட வேண்டும். சிஎஸ்கே அணி வேகமாக ரன்கள் குவிக்க வேண்டும். சிஎஸ்கேவில் டாப் ஆர்டர் நன்றாக இருக்கிறது. அவர்கள் சரியாக விளையாடத் தவறும் பட்சத்தில் மிடில் ஆர்டர் அணிக்காக சிறப்பாக விளையாட வேண்டிய சூழல் உருவாகிறது. ஆனால், சிஎஸ்கேவின் மிடில் ஆர்டர் அதற்கு முழுவதும் தயாராக இருப்பதாகத் தெரியவில்லை என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *