இதனைத் தொடர்ந்து, காத்மாண்டுவின் திரிபுவன் பன்னாட்டு விமான நிலையத்தில் அந்த விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
இதுகுறித்து அந்நாட்டு அதிகாரிகள் கூறுகையில், அந்த விமானத்தில் சென்ற 15 பயணிகள் மற்றும் 3 பணியாளர்கள் என யாருக்கும் எந்தவொரு ஆபத்தும் ஏற்படவில்லை எனவும் அனைவரும் நல்வாய்ப்பாக உயிர்தப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக, அந்த விமானத்திலிருந்து விமான நிலையத்திற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு தரையிறக்கப்பட்டதாகவும், பின்னர் ஓடுதளத்திலிருந்து நிறுத்துமிடத்துக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிக்க:பொய் வழக்குகளுக்கு காங்கிரஸ் அடிபணியாது: கார்கே