மது, புகையிலைக்கு தடா: ஒழுக்கம், ஆடம்பர ஆடைகள், கண்கண்ணாடியில் அதிக ஆர்வம் காட்டிய அஜித் பவார் | alcohol and tobacco no: Ajit Pawar, who showed great interest in discipline, luxury clothes, and sunglasses

Spread the love

மகாராஷ்டிரா அரசியலில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக அசைக்க முடியாத சக்தியாக விளங்கிய துணை முதல்வர் அஜித் பவார் விமான விபத்தில் அகால மரணம் அடைந்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. அஜித் பவார் எப்போதும் வேலை வேலை என்று இருப்பார். அதிகமான நேரங்களை தொண்டர்களுடனும், கட்சிப்பணியிலும் ஈடுபடுத்திக்கொள்வார். அதனால்தான் தேசியவாத காங்கிரஸ் கட்சியை முழுமையாக தனது கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும் என்று கருதி தனது சித்தப்பா சரத் பவாரிடமிருந்து தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டார்.

பாராமதியின் செல்லப்பிள்ளையாகவும், புனேயில் வலுவான சக்தியாகவும் விளங்கிய அஜித் பவார் பொதுவாக ஒழுக்கத்தை விரும்பக்கூடியவர் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

அவரும் ஒழுக்கத்தை கடைப்பிடிப்பார். அவர் கண்கண்ணாடிகளை தேர்ந்தெடுப்பதில் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்.

விபத்து நடந்த இடம்

விபத்து நடந்த இடம்

குறிப்பாக சன்கிளாஸ் வகைகளில் மேபேக் ரகங்களில் இருந்து வழக்கமான ரே பான் வரை பலதரப்பட்ட பிராண்ட் சன்கிளாஸ்கள் அஜித்பவாரிடம் இருந்தது. லென்ஸ்கள் எப்பொழுதும் தடிமனாகவும், சாய்வாகவும், சில சமயங்களில் மென்மையானதாகவும், பெரும்பாலும் தடிமனான பிரேம்களுடன் இருக்கும்.

கைக்கடிகாரங்கள் மற்றும் உடைகள் போன்றவற்றை தேர்ந்தெடுப்பதிலும் அதிக அக்கறை செலுத்தக்கூடியவர். எங்கு செல்கிறோம் என்பதை பொறுத்து தன் தோற்றத்தை மாற்றிக்கொள்வார். சட்டசபை கூட்டத் தொடர்களிலும், பட்ஜெட் தாக்கல் செய்யும்போதும் சஃபாரி சூட் மற்றும் பூட்ஸ் அணிவது வழக்கம். அவர் பிரதமரைச் சந்திக்க அல்லது நிதியமைச்சராக ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டங்களில் பங்கேற்பதற்காகப் புது டெல்லிக்குச் செல்லும் போது, தனது பாரம்பரிய குர்தா பைஜாமாக்களைத் தவிர்த்துவிட்டு வழக்கமான பார்மல் உடைகளை அணிவது வழக்கம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *