மெக்சிகோவுக்கு அமெரிக்க வளைகுடா என்று பெயர் சூட்ட விரும்பிய டிரம்ப்புக்கு மெக்சிகோ பிரதமர் பதில் கிளாடியா ஷேன்பாம் அளித்துள்ளார்.
மெக்சிகோ வளைகுடாவுக்கு அமெரிக்க வளைகுடா என்று பெயரிடலாம் என அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார். இந்த நிலையில், அவரின் கருத்துக்கு மெக்சிகோ பிரதமர் கிளாடியா ஷேன்பாம் விமர்சனம் தெரிவித்துள்ளார். கிளாடியா கூறியதாவது, “1607 ஆம் ஆண்டுகளின் வரைபடங்களில் அமெரிக்காவை அமெரிக்கா மெக்சிகானா என்ற பெயரில் பொறிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை ஏன் அமெரிக்கா மெக்ஸிகானா என்று அழைக்கக் கூடாது? கேட்க அழகாக இருக்கிறது, இல்லையா? அது உண்மையல்லவா?
மெக்சிகோ நாட்டின் ஒரு பகுதியாக இருந்த டெக்ஸாஸ், அரிசோனா, நெவாடா, நியூ மெக்சிகோ, கலிபோர்னியா மாநிலங்கள் தற்போது அமெரிக்காவிடம் இருக்கின்றன. அதனால் அந்தப் பகுதிகளை, மெக்சிகன் அமெரிக்கா என்று பெயர் மாற்றலாம். மெக்சிகோ போதைப்பொருள் கடத்தல்காரர்களால் நடத்தப்படுவதாக தவறான தகவல் டிரம்ப்புக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்று நினைக்கிறேன்’’ என்று தெரிவித்தார்.