வனத்துறைக்கு இறக்கப்பட்ட பொன்முடி! 6 அமைச்சர்களின் துறைகள் மாற்றம்!

Dinamani2fimport2f20232f72f72foriginal2fponmudi Minister Edi.jpg
Spread the love

தமிழக உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்து க. பொன்முடி, வனத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மேலும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின் பேரில், 6 அமைச்சர்களின் துறைகள் மாற்றப்பட்டுள்ளதாக தமிழக ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.

துணை முதல்வர் உதயநிதி! நாளை பொறுப்பேற்பு, செந்தில் பாலாஜியும் அமைச்சராகிறார்

பொன்முடி பதவியிறக்கம்!

அமைச்சரவையின் முக்கிய துறைகளின் ஒன்றான உயர்கல்வித் துறையில் இருந்து மூத்த அமைச்சர் க.பொன்முடி, வனத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மேலும், உயர்கல்வித் துறை யாருக்கு வழங்கப்பட்டது என்ற அறிவிப்பு வெளியாகாத நிலையில், புதிதாக பதவியேற்கவுள்ள கோவி. செழியனுக்கு வழங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் 5 அமைச்சர்கள் துறைகள் மாற்றம்

சுற்றுச்சூழல் துறை அமைச்சர் வி. மெய்யநாதன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார்.

ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார்.

வனத்துறை அமைச்சர் அமைச்சர் எம். மதிவேந்தன் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் பால்வளத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூடுதலாக வகித்து வந்த மின்சாரத் துறைக்கு பதிலாக சுற்றுச்சூழல் துறை வழங்கப்பட்டுள்ளது.

தமிழக அமைச்சரவையில் 3 பேர் நீக்கம்! புதிதாக இருவருக்கு வாய்ப்பு!

செந்தில் பாலாஜிக்கு மின்சாரத் துறை

அமைச்சர்களாக பதவியேற்கவுள்ள செந்தில் பாலாஜி, நாசர், கோவி. செழியன் மற்றும் ஆர்.ராஜேந்திரன் ஆகியோருக்கு இதுவரை ஒதுக்கப்படவில்லை.

மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்கவுள்ள செந்தில் பாலாஜிக்கு முன்னதாக அவர் வகித்த மின்சாரத் துறையே வழங்கப்பட வாய்ப்புள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *