வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி. எப்-16 – புகைப்படங்கள்
Posted on
Spread the love
புறப்பட்ட 19 நிமிட பயணத்துக்கு பின்பு 745 கி.மீ உயரத்தில் திட்டமிட்ட சூரிய ஒத்திசைவு சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.2,392 கிலோ எடை கொண்ட இந்த நிசார் செயற்கைக்கோளின் ஆயுட்காலம் 5 ஆண்டுகள்.எல் பேண்ட் மற்றும் எஸ் பேண்ட் ஆகிய சிந்தடிக் அப்பர்சர் ரேடார் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.நிசார் செயற்கைக்கோள் மூலம் புவியின் சுற்றுச்சூழல் அமைப்புகள், பருவநிலை மாற்றங்கள், பனிப்பாறைகள், வனப்பகுதிகள், பயிர்நில வரைபடம் மற்றும் மண்ணின் ஈரப்பத மாற்றங்கள், நிலத்தட்டுகள் நகர்வு உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்த தகவல்களை பெறமுடியும்.பூமியையும் 12 நாட்களுக்கு ஒருமுறை சுற்றிவந்து துல்லியமான தரவுகள் மற்றும் உயர் தெளிவுத்திறன் படங்களை அனைத்து சீதோஷ்ண நிலைகளிலும் வழங்கும்.ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில், நிசார் செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்ட பிறகு, விஞ்ஞானிகளிடம் உரையாற்றும் இஸ்ரோ தலைவர் வி. நாராயணன்.ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில், நிசார் செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்ட பிறகு, விஞ்ஞானிகளிடம் உரையாற்றும் மிஷன் இயக்குனர் தாமஸ் குரியன்.
Spread the love மண்டபத்தை அடுத்துள்ள வேதாளை பகுதியைச் சேர்ந்தவர் கவுசல்யா. இவரின் மகள் நபியாஶ்ரீ (6). நபியாஶ்ரீக்கு காய்சல் அடித்ததால் மருத்துவரிடம் சிகிச்சை பெற தன் தம்பி கபில்தேவ் முருகன் (17) உடன் […]
Spread the love தென்காசி மாவட்டம், செங்கோட்டை வட்டம், புளியறை கிராமத்தில் செயல்பட்டு வரும் வட்டார போக்குவரத்துச் சோதனைச்சாவடி மற்றும் அதிலிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் இயங்கி வரும் தென்காசி மாவட்ட காவல்துறையின் […]
Spread the love ஐஐடி கரக்பூர் தனது 75-வது ஆண்டைக் கொண்டாடி வருகிறது. இந்நிலையில் இந்தக் கல்வி நிறுவனத்தில் பயின்ற கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி சுந்தர் பிச்சை தனது வாழ்த்து செய்தியை ஐஐடி […]