வரும் கல்வி ஆண்டில் புதிய ஐடிஐ தொடங்க நாளை முதல் விண்​ணப்​பிக்​கலாம்: வேலை​வாய்ப்பு பயிற்​சித்துறை அறிவிப்பு | apply for starting a new ITI from tomorrow

1345362.jpg
Spread the love

சென்னை: வரும் கல்வி ஆண்டில் புதிய ஐடிஐ தொடங்கவும், அங்கீகாரத்தை புதுப்பிக்கவும், புதிய தொழிற்பிரிவுகள் தொடங்கவும் நாளை (ஜன.2) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் பி.விஷ்ணு சந்திரன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: 2025-2026-ம் கல்வியாண்டில் புதிய தொழிற்பயிற்சி பள்ளிகள் (ஐடிஐ) தொடங்குதல், அங்கீகாரத்தை புதுப்பித்தல், புதிய தொழிற் பிரிவுகள் / தொழிற் பிரிவுகளில் கூடுதல் அலகுகள் தொடங்குதல் ஆகியவற்றுக்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஜனவரி 2-ம் தேதி முதல் ஆன்லைனில் (www.skilltraining.tn.gov.in) விண்ணப்பிக்கலாம்.

2025-2026-ம் கல்வியாண்டுக்கு அங்கீகாரம் பெற ஒரு ஆன்லைன் விண்ணப்பம் சமர்ப்பித்தால் போதுமானது. விண்ணப்பிக்கவுள்ள அனைத்து தொழிற்பிரிவுகள் / கூடுதல் அலகுகளுக்கு தேவையான விவரங்கள் அனைத்தும் ஒரே விண்ணப்பத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அனைத்து தொழிற் பிரிவுகளுக்கும் சேர்த்து விண்ணப்ப கட்டணம் ரூ.5,000. ஆய்வு கட்டணம் ரூ.8,000. இக்கட்டணங்களை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் பிப்.28-ம் தேதி ஆகும். கடைசி தேதிக்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். அங்கீகாரம் குறித்த தகவல் மற்றும் அறிவுரைகளை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் அறிந்துகொள்ளலாம். மேலும் 044-22501006 (113) என்ற தொலைபேசி எண்ணிலும் detischennai@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்புகொண்டு விவரம் பெறலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *