வானிலை முன்னறிவிப்பு: சென்னையில் ஏப்.17 லேசான மழைக்கு வாய்ப்பு | Weather forecast: Chance of light rain in Chennai tomorrow

1358313.jpg
Spread the love

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், நாளை (ஏப்.17) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த 24 மணி நேரத்தில், தென்தமிழகம் மற்றும் வடதமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக சேலம் மாவட்டம் மேட்டூர், கிருஷ்ணகிரி மாவட்டம் ஜம்புகுட்டப்பட்டியில் தலா 5 செ.மீ. மழை பெய்துள்ளது.

தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று (ஏப்.16) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்புள்ளது.

ஏப்.17 முதல் ஏப்.22 வரை, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஏப். 17 முதல் ஏப்.20 வரை, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், நாளை (ஏப்.17) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும், என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் மழை: சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. புறநகர்ப் பகுதிகளில் பலத்த சூறைக்காற்றும் வீசியது. கடந்த சில நாட்களாக கொளுத்திய கோடை வெப்பத்திலிருந்து விடுபட்டு சென்னைவாசிகள் சற்றே ஆறுதல் அடைந்துள்ளனர். சென்னையில் பிற்பகல் ஒரு மணி வரை லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்தது.

10 ஆண்டுகளுக்குப் பின்னர் சென்னையில் ஏப்ரல் மாதத்தில் 10 செ.மீ மழை பெய்துள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். | விரிவாக வாசிக்க > 10 ஆண்டுகளுக்குப் பின்னர் சென்னையில் ஏப்ரலில் 10 செ.மீ மழை: பிரதீப் ஜான்

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *