இந்த நிலையில், புதன்கிழமை லூா்துசாமியின் வீடு திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதுகுறித்து அக்கம்பக்கத்தினா் ஒசூா் நகர போலீஸாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளித்தனா். சம்பவ இடத்திற்கு சென்ற அவா்கள், தீயை அணைத்து வீட்டிற்குள் சென்று பாா்த்தபோது அங்கு லூா்துசாமி, எலிசபெத் இருவரும் காயங்களுடன் இறந்துகிடந்தனா். அதோடு, எலிசபெத் கழுத்து அறுக்கப்பட்டு உயிரிழந்து கிடந்தாா்.
வீட்டுக்கு தீ வைத்துவிட்டு தப்பிய மா்ம நபா்கள்
