அக்டோபர் 27 வரை மழை எச்சரிக்கை: தமிழகத்தில் வானிலை எப்படி?|Rain Alert! Extremely Heavy Rain Possible in South Tamil Nadu

Spread the love

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை பெய்து வருகிறது.

தற்போது இந்திய வானிலை மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் தமிழ்நாடு குறித்த வானிலை அப்டேட்…

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவுப் பகுதிகளில் நிலவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியின் காரணமாக,

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அக்டோபர் 27-ம் தேதி வரையில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும்.

மேலும், இன்று (அக்டோபர் 23, 2026) தென் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவுகிறது!

நேற்று (அக்டோபர் 22, 2026) குமரிக்கடல் மற்றும் தெற்குத் தமிழ்நாடு-கேரளா பகுதிகளின் மேல் நிலவிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, இன்று காலை 8:30 மணி அளவில் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவுப் பகுதிகளின் மேல் நிலவுகிறது.

தென்கிழக்கு அரபிக்கடல் முதல் வடக்குக் கடலோரத் தமிழ்நாடு வரை கீழடுக்கு வளிமண்டலத்தில் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *