அஜித் அகர்கர் காலம் ஓவர்.. அந்த இடத்திற்கு வரும் பார்த்திவ் படேல்.. பிசிசிஐ தலைமை எடுத்த முடிவு! | Parthiv Patel: Parthiv Patel Frontrunner to Replace Ajit Agarkar as BCCI Chief Selector

Spread the love

Cricket

oi-Yogeshwaran Moorthi

மும்பை: இந்திய அணியின் தலைமை தேர்வுக் குழு தலைவருக்கான ரேஸில் பார்த்திவ் படேல் முன்னிலையில் இருப்பது தெரிய வந்துள்ளது. அஜித் அகர்கரின் பதவிக் காலம் முடிவடைய இருக்கும் சூழலில், சில வாரங்களுக்கு முன் நடந்த பிசிசிஐ உயர்மட்ட ஆலோசனை கூட்டத்திலும் கூட அஜித் அகர்கர் பங்கேற்கவில்லை. இதனால் அவரின் இடத்தை பார்த்திவ் படேல் கொண்டு நிரப்ப வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.

இந்திய அணியின் தேர்வு குழு தலைவராக இருந்து வருபவர் அஜித் அகர்கர். 2023ஆம் ஆண்டு பதவியேற்ற அஜித் அகர்கர், 3 ஆண்டுகள் பதவிக் காலத்தை நிறைவு செய்துவிட்டார். இவரது பதவிக் காலத்தில் தான் இந்திய அணி சொந்த மண்ணிலேயே 2 டெஸ்ட் தொடர்களில் தோல்வி அடைந்தது. அதேபோல் பேக் அப் வீரர்களையும் திறம்பட அஜித் அகர்கர் கண்டறியவில்லை.

Parthiv Patel

சீனியர்கள் வீரர்களையும் முறையாக கையாளவில்லை என்று பார்க்கப்பட்டது. குறிப்பாக பயிற்சியாளர் பதவியில் இருந்து ராகுல் டிராவிட் விலகிய பின், அஜித் அகர்கரின் தேர்வுகள் பல்வேறு விவாதங்களையும், விமர்சனத்தையும் பெற்று வந்தது. இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன் பிசிசிஐ தலைமை அலுவலகத்தில் சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர், விவிஎஸ் லக்‌ஷ்மண் உட்பட உயர் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தேர்வுக் குழு தலைவரான அஜித் அகர்கர் பங்கேற்கவில்லை. இந்திய கிரிக்கெட்டின் முக்கிய நிர்வாகிகள் ஒரே இடத்தில் கூடி இருந்த போது, அஜித் அகர்கர் பங்கேற்காதது விவாதமாகியது. இதன் மூலமாக அஜித் அகர்கர் பதவிக் காலம் முடிவடைந்த பின், அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்க பிசிசிஐ விரும்பவில்லை என்று தெரிகிறது.

இந்த நிலையில் அஜித் அகர்கரின் இடத்தை இந்திய முன்னாள் வீரர் பார்த்திவ் படேலை கொண்டு நிரப்ப முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. தற்போது ஐபிஎல் தொடரில் குஜராத் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக பார்த்திவ் படேல் இருந்து வருகிறார். இதனால் பார்த்திவ் படேல் அந்த இடத்திற்கு வருவதில் எந்த சிக்கலும் இருக்காது.

இந்திய அணிக்காக 25 டெஸ்ட், 38 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டி20 போட்டிகளில் ஆடியவர் பார்த்திவ் படேல். தோனியின் எழுச்சி காரணமாக தினேஷ் கார்த்திக் எப்படியான சிக்கலை சந்தித்தாரோ, அதே சிக்கல்களை பார்த்திவ் படேலும் சந்தித்தார். இருப்பினும் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே, குஜராத், ஆர்சிபி, மும்பை, ஐதராபாத் உள்ளிட்ட அணிகளுக்காக விளையாடி இருப்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *