அடுத்தடுத்து ஐபிஎஸ் அதிகாரிகள் ராஜினாமா: காவல்துறையில் திடீர் பரபரப்பு  – Kumudam

Spread the love

சங்கர் ஜிவால் ஐபிஎஸ் தீயணைப்பு ஆணையத் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். கடந்த 2023 ஆம் ஆண்டு தமிழக டிஜிபியாக சங்கர் ஜிவால் நியமனம் செய்யப்பட்டார். இவரது பதவிக்காலம் கடந்த 2025 ஆகஸ்ட் 31ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. 

திமுக ஆட்சியில் டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால், ஓய்வு பெறுவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்பு தீ ஆணையம் உருவாக்கப்பட்டு அதன் தலைவராக நியமிக்கப்பட்டார். அதற்கு உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில், சங்கர் ஜிவால் இன்று தீ ஆணையத்தின் தலைவர் பதவியில் இருந்து சங்கர் ஜிவால் ராஜினாமா செய்துள்ளார். உறுப்பினர்கள் ஏற்கனவே ராஜினாமா செய்துவிட்டனர்.

இதே போன்று, சீருடை பணியாளர் தேர்வாணைய வாரிய தலைவராக நியமிக்க ஓய்வுபெற்ற டிஜிபி சுனில்குமாரும் ராஜினாமா செய்துள்ளார். புதிய அரசு கேட்டுக்கொண்டதின் பேரில் ராஜினாமா செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும்,  தமிழ் நாடு தகவல் ஆணையராக நியமிக்கப்பட்ட அபய் குமார் சிங் ஓய்வுபெற்ற டிஜிபி ராஜினாமா செய்திருக்கிறார். அடுத்தடுத்து நியமன பதவிகளிலிருந்து அதிகாரிகள் ராஜினாமா செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *