அடுத்தடுத்து வெளியாகும் ஊழல் குற்றச்சாட்டுகள்; திமுக எப்படி எதிர்கொள்ளப்போகிறது?| how dmk plans to handle growing corruption claims

Spread the love

அடுத்தடுத்து வெளியாகும் ஊழல் குற்றச்சாட்டுகள்

தவிர வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வெளியாக இருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் திமுகவின் ஊழல் பட்டியல் வெளியாகும் என்று நிதியமைச்சர் மரிய வில்சன் கூறியிருக்கிறார்.

இப்படி அடுத்தடுத்து வெளியாகும் ஊழல் குற்றச்சாட்டுகளைத் திமுக எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது? என்ற கேள்வியோடு பத்திரிகையாளர் சுவாமிநாதனைத் தொடர்புகொண்டு பேசினோம்.!

விரிவாக நம்மிடம் பேசத்தொடங்கிய அவர், “திமுகவைப் பொறுத்தவரை, ஊழல் ரீதியான குற்றச்சாட்டுகள் என்பது புதிது கிடையாது. சர்க்காரியா கமிஷன் அமைக்கப்பட்ட காலத்தில் தொடங்கி, 2G அலைக்கற்றை வழக்கு வரை அது தொடரத்தான் செய்தது.

பத்திரிகையாளர் சுவாமிநாதன்

பத்திரிகையாளர் சுவாமிநாதன்

2G வழக்கு மிகப்பெரிய ஊழல் குற்றச்சாட்டாக உருவாக்கப்பட்டு, பெரிய அளவில் உலுக்கிய ஒரு சம்பவம். 2011-ல் அந்த ஊழல் குற்றச்சாட்டு உச்சத்தில் இருந்தபோது, எதிர்க்கட்சியாகக்கூட திமுக வரமுடியாமல் போனது. ஆனால், அதற்கு ஊழல் மட்டுமே காரணம் கிடையாது. தேமுதிகவின் புதிய வரவும் ஒரு காரணம் தான்.

2014-ல் காங்கிரஸும் திமுகவும் பிரியும்போதும் ஒரு பெரிய தோல்வியைச் சந்தித்தார்கள். ஆனால் 2016-ல் எதிர்க்கட்சியாகச் சென்றாலும், குறிப்பிடத்தக்க அளவு சட்டமன்ற உறுப்பினர்கள் அவர்களுக்குக் கிடைத்தார்கள்.

எனவே, கடந்தகால திமுக வரலாற்றைப் பார்த்தால், ஊழல் குற்றச்சாட்டுகளில் அவர்களுக்கு தண்டனைக் கிடைத்ததே இல்லை. ஊழல் ரீதியான விமர்சனங்கள் என்பது ஒரு பிரச்சாரத்திற்கு மட்டுமே கை கொடுக்கும். தேர்தல் ரீதியாக வாக்காளர்களிடம் பிரச்சாரம் செய்யத் தவெக-விற்கு இது பயன்படலாம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *