இனி வரும் காலங்களில் அடுத்தடுத்து என்ன துறையில் வளர்ச்சி இருக்கும்… எந்தத் துறையில் எதிர்காலம் என்கிற தேடல் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் இருக்கும்.
“தற்போது அனைத்து முதலீட்டாளர்களும் கவனிக்க வேண்டிய ஒரு துறை – பாதுகாப்புத் துறை. இப்போது பாதுகாப்புத் துறையில் கிட்டத்தட்ட ரூ.52,000 கோடிக்கான தேவை இருக்கிறது என்று மத்திய அரசு கூறியிருக்கிறது.
ஆன்டி டிரோன், ஆன்டி டேங்கர் என லேட்டஸ்ட் டெக்னாலஜிக்கு ஏற்றவாறு இந்திய பாதுகாப்புத் துறை தங்களை அப்கிரேட் செய்ய உள்ளது.

ராணுவம், கப்பற்படை, விமானப் படை ஆகிய மூன்று படைகளுமே சேர்ந்து தொழில்நுட்பத்தை வளர்க்க உள்ளது.
இதனால், நீண்ட கால அடிப்படையில் பாதுகாப்புத் துறையில் முதலீடு செய்யலாம். இந்த அறிவுரை புதிய முதலீட்டாளர்களுக்கும் சரி… அனுபவமிக்க முதலீட்டாளர்களுக்கு சரி பொருந்தும்.
ஏனெனில் நீண்ட கால அடிப்படையில் இந்திய பாதுகாப்புத் துறை வளர்ச்சியடைய உள்ளது. முக்கியமாக, இந்தியா இனி நாம் தயாரிக்கும் ராணுவ ஆயுதங்கள், தளவாடங்களை ஏற்றுமதியும் செய்ய உள்ளன.
அதனால், நீண்ட கால அடிப்படையில் இந்தப் பங்குகளைக் கவனிப்பது மிக மிக சிறந்தது”. என்கிறார்.