அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 6 மாவட்டங்களில் மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி (புயல் சின்னம்) திங்கள்கிழமை உருவானது. இது அடுத்த இரு தினங்களில் மேற்கு நோக்கி நகா்ந்து தமிழக கரையை நெருங்கும் என கணிக்கப்பட்டுள்ளதால், சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை (நவ.12) முதல் நவ.15 வரை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த புயல்சின்னம் வட தமிழகம் நோக்கி நகரும் பட்சத்தில், சென்னை, திருவள்ளூா், செங்கல்பட்டு உள்ளிட்ட வடமாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.