நான் என்றும் அ.தி.மு.க-வை என்னுடைய உயிர்க்கும் மேலாக நேசிக்கின்றேன். ஆனால், தேனுடன் ஒரு துளி விஷத்தைச் சேர்த்தாலும் விஷம்தான் என்பது போன்று தலைமையின் விடாபடியான குணமும், சுயநல போக்கும் தொண்டர்களான தேனையும் விஷமாக்கிவிடும் என்பதுதான் நிதர்சன உண்மை.
தண்டனைகளைத்தான் நான் தருவேன் என்று தலைமை சொன்னால், யார்தான் கருணையையும், மன்னிப்பைத் தருவார்கள். தன்னை இகழ்ந்தவர்களையும், தாழ்த்தியவர்களையும் கூட அரவணைத்து ஏற்றத்தைத் தந்தவர் அம்மா.

இன்று அனைத்துக் கட்சிகளும் அ.தி.மு.க-வினரை அரவணைக்கத் தயாராக இருக்கும்போது அ.தி.மு.க-வின் தலைமை நீக்குவதில்தான் கவனம் செலுத்துகிறது. நீண்ட யோசனைக்குப் பிறகு அ.தி.மு.க எனும் மக்கள் தலைவர்கள் வளர்த்த இயக்கத்தில் இருந்து விடை பெறுகிறேன். இதுவரை எனக்கு ஆதரவளித்து வந்த கழகத்தின் அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும், செயல் வீரர்களுக்கும், என்னுடைய நன்றிகளை உங்கள் பாதங்களில் சமர்ப்பிக்கின்றேன்.
அம்மா மறைந்தது முதலே தொடர்ந்து துரோகங்களையே நான் சந்தித்து வந்தவன் என்ற முறையில் எனக்கு துரோகி பட்டம் சூட்ட யாரும் முற்பட வேண்டாம்” எனத் தெரிவித்துள்ளார்.