அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஜூலை.14) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.
முதல்வர் விஜய்யை விமர்சித்து பேசியிருக்கும் அவர், “அண்மையில் கரூர் சென்றிருந்த முதல்வர் விஜய் திமுக – அதிமுக கூட்டுக்களவாணி என்று விமர்சனம் செய்திருக்கிறார்.
இது எவ்வளவு பெரிய வார்த்தை. முதல்வர் விஜய் தான் வகிக்கும் பொறுப்புக்கு ஏற்ப பேச வேண்டும்.

அதிமுக சின்னத்தில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்களை திருடும் விஜய் தான் களவாணி. முதல்வர் விஜய் ஆக்கப்பூர்வமாக எதையும் செய்யவில்லை. வெறும் பஞ்ச் டயலாக் பேசி வருகிறார்.
4 கால்கள் இருந்தால் தான் நாற்காலி நிற்கும். விஜய்யின் நாற்காலியில் ஒரு கால் இரவல் கால்.