‘அதிமுக நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்’- வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிக்கை | aiadmk protest boycott velumani natham viswanathan

Spread the love

ஏற்கனவே, கருத்து வேறுபாடு காரணமாக கழக பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்பட்ட அனைவருக்கும் அவரவர் வகித்த மாநில, மாவட்ட உள்ளிட்ட கழக பொறுப்புகளை மீண்டும் திரும்ப வழங்கப்படும் என கழக பொதுச் செயலாளர் அவர்கள் உறுதியளித்தார்கள். ஆனால் அதன்படி மீண்டும் கழக பொறுப்புகள் வழங்கப்படவில்லை, புதிய கழக பொறுப்புகளில் நியமனம் செய்து கழக பொதுச் செயலாளராகிய தாங்கள் வெளியிட்ட அறிவிப்பை, நாங்கள் யாரும் ஏற்றுக்கொள்ள இயலாது. எங்களுக்கு நாங்கள் ஏற்கனவே, வகித்து வந்த கழக பதவிகள் திரும்ப வழங்க வேண்டும், என எழுத்து மூலம் எங்கள் நிலைபாட்டினை தங்களுக்கு தெரிவித்தும், அதற்கு தாங்கள் எந்த பதிலும் இல்லாமல் வேண்டுமென்றே காலம் தாழ்த்தி வருகின்றீர்கள்.

இந்த சூழ்நிலையில் தாங்கள் தற்போது, கழகத்தின் சார்பில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தலைமையேற்று நடத்த எங்களது சொந்த மாவட்டத்தை விடுத்து, வேறு மாவட்டங்களுக்கு நியமித்து, அறிவிப்பை வெளியிட்டுள்ளீர்கள். மாண்புமிகு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், மாண்புமிகு புரட்சிதலைவி அம்மா ஆகியோர்களின் விசுவாசிகளை புறக்கணிக்கும் வகையில் இது போன்று அறிவிப்பு வெளியிடப்படுவதாக உள்ளது.

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கையில், 5 ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள், கூட்டுறவு வங்கிகளில் பெற்ற ரூ.75,000/- வரையிலான வங்கி கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் எனவும், ரூ.75,000/-க்குமேல் கடன் பெற்ற விவசாயிகளின் வங்கி கடனில் 50% அதாவது ரூ.35,000/- மட்டுமே தள்ளுபடி செய்ய த.வெ.க அரசின் அறிவிப்பு, ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல, பாகுபாடின்றி அனைத்து விவசாயிகள் பயிர்கடனை தள்ளுபடி செய்ய த.வெ.க அரசு முன் வரவேண்டும்.

மேலும் கர்நாடகா, மேகதாதுவில் அணை கட்டும் பிரச்சனை மற்றும் காவிரியில் நமக்குரிய பங்கு நீரை பெற்றிடவும், அது மட்டுமின்றி, தமிழகத்தின் ஜீவாதார உரிமைகளை காக்க மாண்புமிகு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், மாண்புமிகு புரட்சிதலைவி அம்மா ஆகியோர்களின் வழியில் அ.இ.அ.தி.மு.கழகம் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் என்றென்றும் ஆதரவாகவும், உறுதுணையாகவும் இருப்போம். இதில் மாறுபட்ட கருத்து வேறுபாடு வேறு எதுவுமில்லை. எனவே, அ.இ.அ.தி.மு.கழகம் சார்பில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு எங்கள் முழு ஆதரவு அளிக்கின்றோம், வேறு மாவட்டங்களில் சென்று கலந்து கொள்ள இயலாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்” என தெரிவித்துள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *