அதிர போகுது அமெரிக்கா.. போயிங், ஏர்பஸ் இரண்டிற்கும் ஒரே நேரத்தில் ஆப்பு வைக்கும் சீனா! பெரிய சிக்கல் | China Tests Passenger-Carrying Electric Aircraft: Could It Challenge Boeing and Airbus in future?

Spread the love

International

oi-Vigneshkumar

பெய்ஜிங்: விமான சந்தையில் பல ஆண்டுகளாக அமெரிக்காவின் போயிங் , ஐரோப்பாவின் ஏர்பஸ் நிறுவனங்கள் தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்த இரு நிறுவனங்களின் ஆதிக்கத்தை மின்சார விமான தயாரிப்பில் முறியடிக்கும் வகையில் சீனா செயல்பட்டு வருகிறது. அதன் காமாக் நிறுவனம் முதல்முறையாக பயணிகளுடன் கூடிய மின்சார விமான சோதனையை வெற்றிகரமாக முடித்துள்ளது.

விமான துறையை எடுத்து கொண்டால் பல ஆண்டுகளாக அமெரிக்காவின் போயிங் , ஐரோப்பாவின் ஏர்பஸ் நிறுவனங்கள் தான் ஆதிக்கம் செலுத்துகிறது. இப்போது உலகில் கிட்டத்தட்ட 80% மார்கெட் இந்த இரு நிறுவனங்களிடம் தான் உள்ளன. ஆனால், அந்த நிலை மாற போகிறது.

US China Boeing Airbus Electric Aircraft

சோதனை வெற்றி

அதாவது சீனாவின் விமான தயாரிப்பு நிறுவனமான காமாக் (COMAC), உள்நாட்டிலேயே உருவாக்கிய CE-25A மின்சார விமானத்தின் முதல் சோதனையை வெற்றிகரமாக முடித்துள்ளது. இது ஏதோ ஆளில்லாமல் நடத்தப்பட்ட சோதனை இல்லை. உள்ளே பைலட்கள் இருந்த நிலையில், வெற்றிகரமாக சோதனை ஓட்டம் நடந்து முடிந்துள்ளது. ஷான்டாங் மாகாணத்தின் பின்ஜோ நகரில் இந்த சோதனை நடைபெற்றதாக சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

இந்த சோதனையில் இரண்டு பைலட்கள் மற்றும் ஒரு பொறியாளர் உள்ளே இருந்துள்ளனர். மொத்தம் 57 நிமிடங்கள் 46 விநாடிகள் நடைபெற்ற சோதனையில், விமானம் 16 நிமிடங்களுக்கு மேல் வானில் பறந்தது. சுமார் 60.4 கிலோமீட்டர் தூரத்தை கடந்தது. விமானத்தின் அனைத்தும் நார்மலாக செயல்பட்டதாகவும், எதிர்பார்த்தபடியே விமானம் செயல்பட்டதாகவும் பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உள்ளே 3 பேர்

இதற்கு முன்பே ஆளில்லாமல் இந்த விமானம் சோதனை செய்யப்பட்டது. கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி முதல் முறையாக CE-25A தனியாக பறந்தது. இதுபோல 19 முறை ஆளில்லாமல் சோதனை நடத்தப்பட்ட பிறகே, மனிதர்களுடன் சோதனைக்கு அனுமதி தரப்பட்டது. அதைத் தொடர்ந்தே இந்த சோதனை வெற்றிகரமாக நடந்து முடிந்தது. காமாக் நிறுவனம் மட்டுமின்றி சீனாவின் முன்னணி பேட்டரி தயாரிப்பு நிறுவனமான CATL, ஷாங்காய் ஜியாவோ டோங் பல்கலைக்கழகம் உள்ளிட்டவை இணைந்து இந்த எலக்டிரிக் விமானத்தை உருவாக்கியுள்ளன.

அடுத்து என்ன

இதையடுத்து இப்போது சீனாவின் சிவில் விமான போக்குவரத்து நிர்வாகத்திடம் சான்றிதழ் பெறுவதற்காக விண்ணப்பிக்கப்பட்ட நிலையில், அதுவும் ஏற்றுக்கொண்டுள்ளது. வணிக ரீதியாகப் பயணிகள் விமானத்தை இயக்குவதற்கு இந்த சான்றிதழ் கட்டாயம். எனவே, மிக விரைவிலேயே இது பயணிகளை ஏற்றி செல்ல ஆரம்பிக்கும் என்றே தெரிகிறது.

இந்த CE-25A விமானத்தில் ஒரே நேரத்தில் 19 பேர் பயணிக்க முடியும். அதிகபட்சம் இது 10 டன் எடை வரை தாங்கும். மணிக்கு 300 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கக்கூடிய இந்த விமானம், 2,400 மீட்டர் உயரத்தில் பயணிக்கும் திறன் கொண்டது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 400 கிலோமீட்டர் தூரம் வரை செல்லும் என்று தெரிகிறது.

சீனாவின் பலம்

இந்த தொழில்நுட்ப வளர்ச்சியில் சீனாவுக்கு இருக்கும் மிக பெரிய பலம் அதன் பேட்டரி உற்பத்தித் திறன். மின்சார வாகனங்களுக்கான பேட்டரி தயாரிப்பில் சீனா உலக அளவில் வலுவான இடத்தைப் பிடித்துள்ளது. மின்சார கார்களுக்கு தேவையான பேட்டரிகளை மிக மிக அதிகளவில் இவை உற்பத்தி செய்யும் நிலையில், அதை கொஞ்சம் மாற்றினாலே அதையே மின்சார விமானங்களுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். இது சீனாவுக்கு மிக பெரிய ஒரு பூஸ்ட்டை கொடுக்கும்.

அமெரிக்கா இப்போது தான் பேட்டரி உற்பத்தியில் சீனாவின் ஆதிக்கத்தை குறைக்க முயன்று வருகிறது. ஆனால், மின்சார விமான சந்தையும் அதற்குள் வேகமாக வளர ஆரம்பித்தால் அது நிலைமை மேலும் சிக்கலாகலாம். விமானத் தயாரிப்பில் போயிங், ஏர்பஸ் முன்னிலையில் இருந்தாலும், அவற்றுக்கு தேவையான பேட்டரி தொழில்நுட்பம் மற்றும் விநியோக சங்கிலிக்கு அவை சீனாவையே நம்பி இருக்க வேண்டி உள்ளது. அது மிக பெரிய சவாலாகவே இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *