“அதைத் தவறாகப் பார்ப்பது முட்டாள்தனம், ஏனென்றால்.!”- இந்தி உச்சரிப்பு டிரோல் குறித்து ரஷ்மிகா| Rashmika Mandanna responds to Hindi accent criticism

Spread the love

தென்னிந்தியத் திரையுலகில் பிரபலமான ஜோடியாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா, கடந்த பிப்ரவரி 26ம் தேதி ராஜஸ்தான் மாநிலம், உதய்ப்பூரில் திருமணம் செய்துகொண்டனர்.

தற்போது இவர்களது நடிப்பில் “ரணபாலி’ படமும் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் பாலிவுட்டின் பிரபல நிகழ்ச்சியான `காஃபி வித் கரண்’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இருவரும் கலந்துகொண்டிருக்கின்றனர்.

`காஃபி வித் கரண்'

`காஃபி வித் கரண்’

அந்த நிகழ்ச்சியில் இந்தித் திரைப்படங்களான ‘அனிமல்’, ‘தம்மா’, ‘காக்டெய்ல் 2’ ஆகியவற்றில் ரஷ்மிகாவின் இந்தி உச்சரிப்பு சமூக வலைத்தளங்களில் டிரோல் செய்யப்பட்டது குறித்து தொகுப்பாளர் கரண் ஜோஹர் கேட்டிருக்கிறார்.

அதற்குப் பதிலளித்த ராஷ்மிகா, “என் பேச்சில் தென்னிந்திய உச்சரிப்பு இருப்பதாகக் கூறுவதில் எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஏனென்றால், நான் தென்னிந்தியாவைச் சேர்ந்தவள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *