“அந்த இடம் சர்கஸ் கூடாரம் போல இருந்தது”- பாக்கியராஜின் இறுதி அஞ்சலி குறித்து ராதிகா சரத்குமார் | Radhika Sarathkumar has posted about K. Bhagyaraj’s final tribute.

Spread the love

இந்நிலையில் ராதிகா தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அப்பதிவில், “50 ஆண்டுகால விசேஷமான நட்புக்கு எனது இறுதி விடைபெறுதல். பாக்யராஜ் சார் ஒரு சிறந்த படைப்பாளி, முதிர்ந்த எழுத்தாளர் மற்றும் சினிமாவில் அற்புதமான எல்லைகளை வகுத்த ஒரு மனிதர். அவருடன் நான் பல மகிழ்ச்சியான தருணங்களையும், அற்புதமான படைப்புகளையும் பகிர்ந்திருக்கிறேன்.

எனது குடும்பத்திற்கு எப்போதும் தனது அமைதியான, விசுவாசமான வழியில் உறுதுணையாக நின்றவர். அவரது குடும்பத்தினர், நண்பர்கள், சக கூட்டாளிகள் மற்றும் ரசிகர்களுக்கு இது ஒரு அதிர்ச்சியளிக்கும் விடைபெறுதல்.

ராதிகா சரத்குமார்

ராதிகா சரத்குமார்

அனைவரும் மற்ற விஷயங்களை மறந்து, அமைதியாக துக்கம் அனுசரிக்க வேண்டிய ஒரு இடம், சர்கஸ் கூடாரம் போல இருந்தது. எப்போது, எங்கே நாம் இந்த அளவுக்கு இரக்கமற்றவர்களாக மாறினோம் அல்லது மாற்றப்பட்டோம்?

அரசாங்கமும், சினிமாத்துறையும் ஒன்றிணைந்து அமர்ந்து, இதற்கான நெறிமுறைகளையும் கூட்டு நிர்வாகத்தையும் வகுக்க வேண்டும். மேலும், மறைந்த அந்த ஆன்மாவிற்கு உரிய மரியாதையை வழங்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *